‘ரத்னம்’ பட விவகாரம்... விஷால் மனு மீது உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படம்
நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படம்

‘ரத்னம்’ படத்திற்கான நிலுவை சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, லைகா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விஷால் பிலிம் பேக்டரி சார்பில் இத்திரைப்படத்தை நடிகர் விஷால் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ராமச்சந்திர ராஜு, யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தனது 'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது. அந்த தொகையை திருப்பி வழங்காததை அடுத்து விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

லைகா புரொடெக்சன்ஸ்
லைகா புரொடெக்சன்ஸ்

அதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ரத்னம் படத்திற்காக விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான 2.60 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த படத் தயாரிப்பு நிறுவனமான STONE BENCH FILMS நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் இதனை எதிர்த்து விஷால் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு , நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் கே.ஜி. திலகவதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷாலின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in