இதனால் தான் வெளியேறினேன்... ’குக் வித் கோமாளி’ வெங்கடேஷ்பட் பேட்டி!

வெங்கடேஷ்பட்
வெங்கடேஷ்பட்

'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன் என்பது குறித்து முதல் முறையாக செஃப் வெங்கடேஷ் பட் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபல சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ அதன் ஐந்தாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. இதில் முதல் நான்கு சீசன்களில் செஃபாக இருந்த வெங்கடேஷ்பட் நான்காவது சீசனோடு விலகுவதாக அறிவித்திருந்தார். அவரோடு சேர்ந்து நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேசன் நிறுவனம், அதன் இயக்குநர் பார்த்திபன் என அனைவருமே விலகுவதாக சொன்னது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இந்தக் குழு அப்படியே சன் டிவிக்கு நகர்ந்து, அங்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குப் போட்டியாக ‘டாப் குக்கு, டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுகிழமையில் இருந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், முதல் முறையாக விஜய் டிவியை விட்டு விலகியது ஏன் என வெங்கடேஷ்பட் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசியிருக்கிறார்.

அதில் அவர், “கிச்சன் சூப்பர் ஸ்டார், குக் வித் கோமாளி என தொடர்ந்து 24 வருடங்களுக்கும் மேலாக விஜய் டிவியில் தொடர்ந்து பயணித்து வந்தேன். இதில் மீடியா மேஷன் நிறுவனமும் என்னோடு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. நிகழ்ச்சியில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோருமே நான் நினைப்பதை செய்ய முழு சுதந்திரத்தை கொடுத்தார்கள்.

 ‘குக் வித் கோமாளி’
‘குக் வித் கோமாளி’

ஆனால், மீடியா மேஷனுக்கும் விஜய் டிவிக்கும் இடையில் சின்ன கருத்து வேறுபாடு உருவாகி விட்டது. அதனால், அவர்கள் வெளியேறினார்கள். எனக்கும் மீடியா மேஷன் தான் கம்ஃபோர்ட் ஜோன். அதனால், அவர்களுடன் நானும் வந்துவிட்டேன்” எனப் பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in