துக்க வீட்டில் பட வாய்ப்பு தேடும் ஹீரோக்கள்... பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

முகேஷ் சாப்ரா
முகேஷ் சாப்ரா

இந்தி திரையுலகின் பிரபல காஸ்டிங் டைரக்டர் முகேஷ் சாப்ரா, பயிற்சி பெறாத நடிப்பின் மீது ஆர்வமுள்ள புதுமுக நடிகர்கள் நிறைய பேர் வாய்ப்பிற்காக துக்க வீட்டிற்கு வருகின்றனர் எனக் கூறி அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறார்.

பயிற்சி பெறாத நபர்கள் எப்படி நடிப்பில் இறங்குகிறார்கள், வேலையைத் தேடி எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பதை கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்யும் காஸ்டிங் இயக்குநர் முகேஷ் சாப்ரா கூறியுள்ளார்.

இது குறித்து தனது சமீபத்திய பேட்டியில், பிரபல நடிகர்களின் இறுதிச் சடங்குகளில் வாய்ப்புக்காக போராடும் புதுமுக நடிகர்கள் கலந்து கொண்டதை அவர் சுட்டிக்காட்டி, பட வாய்ப்புக்காக இப்படி செய்வது தன்னை மிகவும் வருத்தப்பட வைப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், “எந்தச் சூழ்நிலையிலும் எந்த வாய்ப்பையும் தவறவிடாத அளவுக்கு நடிகர்களாக வேண்டும் என்ற ஆசையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நீங்கள் விரும்பும் கலையைக் கற்றுக் கொண்டு கடினமாக உழைக்கிறீர்கள் என்றால், நான் அதை மதிக்கிறேன்.

ஆனால், நீங்கள் எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை, எதையும் கற்றுக் கொள்ளவில்லை, நேரடியாக வர முயற்சிக்கிறீர்கள்! அதுவும் இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் இப்படி நடந்துக் கொள்வது வெறுப்பாக இருக்கிறது. இறுதிச் சடங்குகளில் பிரபலங்களின் சூழ்நிலையை மதித்து நடந்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in