மகன் திருமணத்துக்கு ரூ.1000 கோடி செலவு?... மகிழ்ச்சியில் திளைக்கும் முகேஷ் அம்பானி!

அம்பானி குடும்பம்
அம்பானி குடும்பம்

பில்லியன் கணக்கில் சொத்து இருந்தும் அதில் ஒரு சதவீதம் மட்டுமே தனது மகன் திருமணத்திற்காக செலவு செய்ய இருக்கிறாராம் அம்பானி. இந்தத் தகவல் பலரையும் ஆச்சரியப்பட்டுத்தியுள்ளது.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட்
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட்

ஆசியாவின் பணக்காரப் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி. ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பணக்காரர் பட்டியலின்படி இவருடைய சொத்து மதிப்பு மட்டும் சுமார் 112 பில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ. 10 லட்சம் கோடி. இவ்வளவு சொத்து மதிப்பு கொண்ட அம்பானி தனது இளையமகன் ஆனந்த அம்பானியின் திருமணத்திற்காக தனது சொத்தில் ஒரு சதவீதம் (ரூ. 1000 கோடி) மட்டுமே செலவு செய்ய இருக்கிறாராம். இந்தத் தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நிச்சயமானது. இந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

உணவு வழங்கும் அம்பானி குடும்பம்...
உணவு வழங்கும் அம்பானி குடும்பம்...

திருமணத்திற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே திருமண விழாக்களைத் தொடங்கி இருக்கிறது அம்பானி குடும்பம். நேற்று திருமண விழாவின் ஒருபகுதியாக குஜராத்தி பாரம்பரிய உணவு வகைகளை ஜாம்நகரில் உள்ள ஜோக்வாட் கிராம மக்கள் 51,000 பேருக்கு வழங்கினர். திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கன், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அவரது முன்னாள் மனைவி மெலிண்டா, குமார் மங்கலம் பிர்லா என பல முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

2024ல் சக்தி வாய்ந்த 100 இந்தியர்கள்... மோடி முதலிடம்... அமித்ஷா இரண்டாமிடம்... அசரடித்த பட்டியல்!

மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரில் காதலியுடன் திருமணம்... வைரலாகும் வீடியோ!

சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: செல்வப்பெருந்தகை தடாலடி பேட்டி!

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ எங்களிடம் இருக்கு... பணம் கேட்டு மிரட்டிய பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது!

மேட்ரிமோனி இணையதளங்கள் மூலம் வலை; கஸ்டம்ஸ் ஆபீசர் என பொய்... 259 பெண்களை ஏமாற்றிய பலே மோசடி மன்னன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in