சாதி குறித்துப் பேசிய சகபோட்டியாளர்... சர்ச்சையான பிக் பாஸ் வீடு!

'பிக் பாஸ்’ வீடு
'பிக் பாஸ்’ வீடு

பிக் பாஸ்7 வீட்டில் மணி சந்திரா சக போட்டியாளர் மாயாவிடம் சாதி குறித்துப் பேசியதால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து நடிகர் கமல்ஹாசன் இந்த வார இறுதியில் விசாரணை மேற்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ்7 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேற, பவா செல்லதுரையும் உடல்நிலையைக் காரணம் காட்டி வெளியேறினார். கடந்த வாரத்தில் விஜய் வர்மா குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேறினார்.

மேலும், பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வாரத்தில் ஐந்து போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைய இருக்கிறார்கள் என கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். ’ராஜா ராணி’ புகழ் அர்ச்சனா, கானா பாலா, மானசி, சாமு சாமுவேல்ஸ், பிரவீனா மாயா ஆகியோர் வைல்ட் கார்டில் நுழைய இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது பிக் பாஸ் இல்லத்திற்குள் சாதி குறித்தான சர்ச்சை எழுந்துள்ளது.

பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் வீடு

நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே சண்டைக்கோழியாக கன்டென்ட் கொடுத்து வருபவர் ’விக்ரம்’ புகழ் மாயா. தற்போது மாயா வைத்துள்ள மற்றுமொரு குற்றச்சாட்டு சோஷியல் மீடியாவில் பேசு பொருள் ஆகி உள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தபோது, மணி தன்னிடம் சாதி பற்றி பேசியதாக ஐஷூவிடம் கலந்துரையாடினார். மாயாவுக்கு சாப்பாடு பரிமாறும் போது, தனக்கு சிக்கன் வேண்டாம் கிரேவி மட்டும் தருமாறு கேட்டதற்கு ’நீங்க இந்த சாதியா’ எனக் குறிப்பிட்டு கேட்டிருக்கிறார் மணி.

பிக் பாஸ் மாயா
பிக் பாஸ் மாயா

உடனே, ‘சாதி பத்தியெல்லாம் பேசாத அதெல்லாம் தப்பு!’ என அந்த இடத்திலேயே கண்டித்த மாயா, நாமினேஷனின் போதும் மணியை ஒரு பிற்போக்குவாதி என கூறி நாமினேட் செய்தார். ஆனால், அவர்களுக்கிடையே நடந்த இந்த சாதி பற்றிய பேச்சு எடிட்டட் வெர்ஷனில் ஒளிபரப்பாகவில்லை. இதுவரை எந்த சீசனிலும் நடக்காத ஒரு விஷயமாக சாதி குறித்த பேச்சு பிக் பாஸ் வீட்டில் எழுந்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த வாரம் இதுகுறித்து கமல்ஹாசன் கண்டிப்பாக விவாதிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in