இரண்டாவது குழந்தைக்கு தந்தையான பிக் பாஸ் பிரபலம்... குவியும் வாழ்த்துகள்!

பிக் பாஸ் சீசன்1
பிக் பாஸ் சீசன்1

பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நடிகர் ஆரவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் ஆரவ் பிக் பாஸ் தமிழின் முதல் சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகை ஓவியாவுடன் காதல், மருத்துவ முத்தம் என சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர் பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பிறகு படங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில், ’கலகத்தலைவன்’ படத்தில் இவரது நடிப்பில் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் காதலியும், நடிகையுமான ராஹேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கெனவே கடந்த 2021ம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய பதிவில், ’எங்கள் விலைமதிப்பில்லா குட்டி இளவரசியை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. அவள் ஏற்கெனவே எங்கள் வாழ்க்கையை அன்பால் நிரப்பியுள்ளதால் எங்கள் குடும்பம் முழுமை அடைந்ததாக உணர்கிறோம். மேலும் எண்களின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். எங்களுடைய பெண் குழந்தையுடன் இந்த அழகான பயணத்தை துவங்கியுள்ளோம். உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுக்கு நன்றி!” என தெரிவித்துள்ளார்.

ஆரவுக்கும் அவரது குடும்பத்திற்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in