3டியில் கல்யாண உடை... இந்திய வம்சாவளி பில்லியனரின் மலைக்க வைக்கும் திருமணம்!

3டியில் கல்யாண உடை... இந்திய வம்சாவளி பில்லியனரின் மலைக்க வைக்கும் திருமணம்!

இந்திய வம்சாவளி பில்லியனரான அங்கூர் ஜெயின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. திருமணத்தில் அவரது மனைவி எரிகா அணிந்திருந்த 3டி உடைதான் இப்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

’பில்ட் ரிவார்ட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அங்கூர் ஜெயின். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவருக்கும் முன்னாள் WWE மல்யுத்த வீராங்கனை எரிகா ஹம்மண்ட் என்பவருக்கும் கடந்த 26ம் தேதி எகிப்தில் ஆடம்பரமான திருமணம் நடந்து முடிந்துள்ளது.

உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் தங்கள் திருமண உறுதிமொழியைப் பரிமாறிக் கொண்டனர். பண்டைய பிரமிடுகளின் பின்னணியில் இவர்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தங்களை வாழ்த்திய அனைவருக்கும் அங்கூர் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

அங்கூர் மற்றும் எரிகா திருமணத்தின் முக்கிய சிறப்பம்சமாக எரிகாவின் ஆடை இருந்தது. தன்னுடைய சிறப்பு நாளுக்காக, எரிகா வழக்கமான வெள்ளை நிற திருமண கவுன்களைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக இன்னும் ஸ்பெஷலான உடையைத் தேர்வு செய்துள்ளார்.

ஹார்ட் நெக்லைன் மற்றும் உடலுடன் ஒட்டிய தங்க நிறமுள்ள ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்திருந்தார். மேலும், அந்த கவுன் முழுவதும் இருந்த தங்க மலர்கள் 3டி-யில் செய்யப்பட்டு இருந்தது அந்த கவுனை இன்னும் சிறப்பாக்கியது.

நடனமாடும் மயில் என்ற தீமில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆடையில் 3டி ஷிம்மர்களும் இருந்தது பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்படி அமைந்தது.

தனது திருமணம், அதற்கு பின்னான பார்ட்டி என அனைத்திற்கும் வைர நகைகளை அணிந்து அசத்தியுள்ளார் எரிகா. இவருக்காக பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட இந்த நகைகளை செய்ய இரண்டு மாதங்கள் ஆகியிருக்கிறது. இந்திய வம்சாவளியின் இந்த மலைக்க வைக்கும் திருமணம் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in