'GOAT' படத்தை அடுத்து இன்னொரு படத்திலும் விஜயகாந்த்... ரசிகர்கள் குஷி!

விஜயகாந்த், விஜய்
விஜயகாந்த், விஜய்

'GOAT' படத்தை அடுத்து நடிகர் விஜயகாந்த் ஏ.ஐ. டெக்னாலஜி மூலம் இன்னொரு படத்திலும் வர இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்- வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'GOAT'. செப்டம்பர் 5 அன்று வெளியாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்க அமெரிக்கா கிளம்பி சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இதில் நடிகர்கள் மோகன், பிரபுதேவா, ஜெயராம் எனப் பலரும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் மறைந்த நடிகர் விஜயகாந்தும் ஏ.ஐ. டெக்னாலஜி மூலம் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார். இந்தத் தகவலை அவரது மனைவி பிரேமலதா தனது சமீபத்திய நேர்காணலில் உறுதி செய்தார்.

நடிகர் விஜயின் திரையுலக வளர்ச்சிக்கு, சிறப்புத் தோற்றங்களில் நடித்துக் கொடுத்து பெரிதும் உதவியவர் விஜயகாந்த். இப்போது அவர் மறைந்த பின்பு அவரை 'GOAT' படத்தில் ஏ.ஐ. மூலம் திரையில் உயிர் கொடுக்கிறது படக்குழு. இந்தப் படம் மட்டுமல்லாமல், தனது இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்திருக்கும் ‘படைத்தலைவன்’ படத்திலும் ஏ.ஐ. டெக்னாலஜி மூலம் வரவிருக்கிறாராம் விஜயகாந்த்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. விஜயகாந்த் மறைந்த சமயத்திலேயே, ’சண்முகபாண்டியனின் ‘படைத்தலைவன்’ படத்தில் சிறப்பு கதாபாத்திரம் செய்து தருவேன். அவரது சினிமா வளர்ச்சிக்கு உதவுவேன்’ என நடிகர் லாரன்ஸ் சொல்லியிருந்தார்.

அதுபோல, நடிகர் விஜய் தனக்கு ஆரம்ப காலத்தில் உதவி செய்த கேப்டன் மகன் படத்திற்கு அப்படி சிறப்புத் தோற்றத்தில் நடித்து உதவாலாமே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!

பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்... பள்ளிக்கல்வித்துறை புதிய அப்டேட்ஸ்!

16,500 கோடி பயிர்க் கடன்... இந்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது கூட்டுறவுத் துறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in