பிக் பாஸூக்கு அடுத்து குக் வித் கோமாளியா... ரவீனா பதில் !

ரவீனா
ரவீனா

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில், இதையடுத்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா என ரவீனாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

ரவீனா
ரவீனா

விஜய் டிவியில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் முடிந்துள்ளது. இதில் சின்னத்திரை நடிகை ரவீனாவும் போட்டியாளராகப் பங்கேற்றார். ஆனால், அவர் நிகழ்ச்சியின் இறுதி வரை பங்கேற்கவில்லை. இடையிலேயே குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே அவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்தார். அப்படி இருக்கும் போது விரைவில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்க இருக்கிறது. இதில் மீண்டும் பங்கேற்பீர்களா என ரவீனாவிடம் கேட்கப்பட்டது.

ரவீனா
ரவீனா

இதற்கு பதில் சொன்ன ரவீனா, “ ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் அடுத்த சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. ஆனால், இந்த சீசனில் நான் கலந்து கொள்வேனா என்பது தெரியவில்லை. ஏனெனில், இப்போது நான் ஜோடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருக்கிறேன். அதனால், என்னை இந்த சீசனில் கூப்பிடுவது சந்தேகம்தான். சீக்கிரம் சீசன் தொடங்க இருக்கும் நிலையில், என்னை இன்னும் அவர்கள் கூப்பிடவில்லை” என்று சொல்லி இருக்கிறார் ரவீனா.

இதையும் வாசிக்கலாமே...


ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in