வருங்கால கணவருடன் தாய்லாந்து பறந்த நடிகை வரலட்சுமி... வெகேஷன் புகைப்படங்கள் வைரல்!

வருங்கால கணவருடன் வரலட்சுமி...
வருங்கால கணவருடன் வரலட்சுமி...

நடிகை வரலட்சுமி சரத்குமார் வருங்காலக் கணவருடன் தாய்லாந்திற்கு வெகேஷன் சென்றுள்ளார். அங்கு காதலருடன் எடுத்த ரொமான்டிக்கான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

நடிகை வரலட்சுமிக்கு மும்பை தொழிலதிபர் நிகோலய் சத்தேவ்வுடன் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயத்தார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்தது. விரைவில் திருமண தேதியும் அறிவிக்கப் போகிறோம் என்றது நடிகர் சரத்குமார் குடும்பம். மார்ச் 5 அன்று வரலட்சுமி பிறந்தநாளுக்கு அவுட்டிங் அழைத்து சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார் நிகோலய் சத்தேவ். இப்போது கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து இந்த ஜோடி தாய்லாந்துக்கு வெகேஷன் சென்றுள்ளனர்.

அங்கு தன் வருங்கால காதலருடன் செம ரொமான்டிக்காக எடுத்தப் புகைப்படங்களைத் தொடர்ந்து சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் வரலட்சுமி. இந்த க்யூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின் கொடுத்து வருகின்றனர்.

43 வயதாகும் நிகோலய் சத்தேவுக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 15 வயதில் ஒரு மகளும் உள்ளார். இந்த செய்தி தெரிய வந்ததும் பலரும் ‘வரலட்சுமி இரண்டாவது மனைவியா? இப்படியான திருமணம் தேவையா?’ என்ற ரீதியில் கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

இதற்கெல்லாம் மறைமுக பதிலடியாக வரலட்சுமி, ‘என் வாழ்க்கையில் எனக்கு சந்தோஷம் தரும் முடிவுகளைத்தான் எடுப்பேன். யாருக்காகவும் அதை மாற்றிக் கொள்ள மாட்டேன். எல்லாப் பெண்களும் அப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று பதிவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...    

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in