ஜோவிகாவின் படிப்பு சர்ச்சை... ஆதரவுக் குரல் எழுப்பினார் வனிதா விஜயகுமார்!

ஜோவிகா
ஜோவிகா

ஜோவிகாவின் படிப்புத் தொடர்பாக பிக் பாஸ் இல்லத்திற்குள் எழுந்த சண்டைக்கு அவருடைய அம்மா வனிதா விஜயகுமார் சமூக வலைதளத்தில் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார்.

நடிகை விசித்ராவும், ஜோவிகாவும் கல்வி குறித்து விவாதித்ததுதான் தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருளாகி உள்ளது. இதில் விசித்ரா, ’அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அதனால் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து முடித்துவிடு’ என்று ஜோவிகாவுக்கு அட்வைஸ் கொடுத்தார். ஆனால், அதை அவர் சொன்ன விதம் தவறாக அமைந்தது. இதற்கு ஜோவிகா, ‘எனக்கு படிப்பு வரல. அதனால் தான் நான் 9-ம் வகுப்போடு நிறுத்திவிட்டேன். என்னைப்போல் ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்காக தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

ஜோவிகா
ஜோவிகா

படிச்சா தான் முன்னேற முடியும் என்பது கிடையாது. எல்லாரும் டாக்டருக்கு படிச்சா யாரு கம்பவுண்டர் வேலை பார்ப்பது. இப்படி படிக்க சொல்லி வற்புறுத்துவதால் தான் நீட் மரணங்கள் நடைபெறுகின்றன’ என ஜோவிகா பேசியதற்கு ஹவுஸ்மேட்ஸ் ஆதரவு கொடுத்தார்கள்.

இப்படி ஜோவிகாவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கிறதோ அதே அளவுக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. ஜோவிகா சொல்வது சரி என்றாலும் பொருளாதரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கு படிப்பு முக்கியம். ஜோவிகாவுக்கு அந்த பிரச்சினை இல்லை என்பதால் சமாளித்து விடுவார் எனக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் வனிதா ஜோவிகா, தமிழ்க் கவிதை ஒன்றை எழுதி படிப்பது போன்ற ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ‘குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த கனவுகள் உள்ளது. உங்களிடம் இப்போது யாரும் அட்வைஸ் கேட்கவில்லை. பெற்றோருக்கு அவர்களுடைய குழந்தைகளுக்கு எது நல்லது என்று தெரியும். அதனால், நீங்கள் அமைதியாக இருங்கள்’ எனப் பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in