சாக்லேட் அருங்காட்சியத்தில் ரிலாக்ஸ் மூடில் தமன்னா!

நடிகை தமன்னா
நடிகை தமன்னா

சாக்லேட் அருங்காட்சியத்தில் நடிகை தமன்னா ரிலாக்ஸ் மூடில் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.

நடிகை தமன்னா தற்போது சினிமாவில் இருந்து சின்ன பிரேக் எடுத்து சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் தற்போது சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர்ஃபுல் புகைப்படங்கள் மற்றும் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் மிகவும் பிரபலமான இடம் சாக்லேட் அருங்காட்சியம். இங்குள்ள சாக்லேட் நீரூற்று மிகவும் பிரபலமானது.

இந்த சாக்லேட் தொழிற்சாலையில், சாக்லேட் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் பார்க்க அனுமதிக்கப்படுவதுடன், சுவைக்க சாக்லேட்களும் உங்களுக்குக் கொடுக்கப்படும். உங்களுக்குப் பிடித்த வகையில், நீங்களே சாக்லேட் செய்யவும் உங்களுக்கு அனுமதியும் கிடைக்கும். இந்த வீடியோவைதான் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in