
தனது முன்னாள் கணவர் நாகசைதன்யாவின் பெயர் குறித்தான டாட்டூவை நடிகை சமந்தா நீக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய சமந்தா, தற்போது மையோசிடிஸ் நோய்க்காக தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், சினிமாவில் இருந்து பிரேக் எடுத்திருக்கும் சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் எனவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது தனது ரசிகர்களிடமும் கேள்வி-பதில் மூலம் உரையாடி வருவார்.
அப்படி ஒருமுறை ரசிகர் ஒருவர் டாட்டூ பற்றிக் கேட்டபோது, ‘வாழ்வில் யாருமே டாட்டூ என்பதை போடவே போடாதீர்கள். குறிப்பாக நான் அந்தத் தவறை செய்யவே மாட்டேன்’ என கண்கள் கலங்கியபடி கூறினார். அதற்குக் காரணம் சமந்தா போட்டிருந்த சில டாட்டூகள்தான். நாகசைதன்யாவும் சமந்தாவும் கப்புள் டாட்டூ கைகளில் போட்டிருந்தார்கள்.
அதேபோல, சமந்தா நாகசைதன்யாவின் பெயரை தனது விலா எலும்பு பகுதியின் கீழே ‘சாய்’ என நாகசைதன்யாவின் பெயரை டாட்டூவாக போட்டிருந்தார். இதைத்தான் தற்போது நீக்கியுள்ளார். இதை சமந்தாவின் சமீபத்திய ஃபோட்டோஷூட்டில் உறுதி செய்த ரசிகர்கள் ‘இனிமேல் சமந்தாவும் நாகசைதன்யாவும் ஒன்று சேர வாய்ப்பே இல்லை’ என தெரிவித்து வருகின்றனர்.