இணையத்தில் கசிந்த சாய்பல்லவி புகைப்படம்...தீயாய் டிரெண்டாக்கும் ரசிகர்கள்!

சாய்பல்லவி
சாய்பல்லவி

ரன்பீர்- சாய்பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ படத்தில் இருந்து புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதனை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் தோல்வியைத் தழுவ அதை ஈடுகட்ட, மீண்டும் ராமாயணக் கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது பாலிவுட். இதில் ராமனாக ரன்பீரும் சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் வென்ற ஜெர்மானிய இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மருடன் கைக்கோத்திருக்கிறார்.

இந்தப் படத்தை ‘கே.ஜி.எஃப்’ நாயகன் யஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாத இறுதியில் இரண்டாம் நிலை நடிகர்களுடன் தொடங்கியது. அயோத்தி அரண்மனை போன்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட செட் வீடியோ இணையத்தில் வைரலானது.

இப்போது ரன்பீர், சாய்பல்லவிக்கான போர்ஷன்களும் படமாக்கப்பட்டு வருகிறது. சீதையாக சாய்பல்லவி, ராமன் தோற்றத்தில் ரன்பீர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. பலமுறை பார்த்த, நன்றாக தெரிந்த கதையாக இருந்தாலும் இந்த நடிகர்கள் நடிப்பில் ராமாயணம் எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in