திட்டினாலும் மனசை தேத்திப்பேன்... ‘பாக்கியலட்சுமி’ ரேமா அசோக் பேட்டி!

நடிகை ரேமா அசோக்
நடிகை ரேமா அசோக்

டிஜிட்டல் யுகம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் வாய்ப்புக்கான களமும் விரிவடைந்திருக்கிறது. அப்படி சமூகவலைதளத்தில் பிரபலமாகி நடிகையானவர்களில் ரேமா அசோக்கும் ஒருவர். ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் வில்லியாக மிரட்டியவருக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என்ற இன்னொரு முகமும் இருக்கிறது.

அவரிடம் காமதேனு டிஜிட்டலுக்காகப் பேசினோம்.

நடிகை, தொழில் முனைவோர், மேக்கப் ஆர்டிஸ்ட் என கலக்குறீங்களே... எப்படி எல்லா வேலைகளுக்கும் நேரம் கிடைக்கிறது?

ரேமா அசோக்
ரேமா அசோக்

நடிகை, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என பல விஷயங்கள் செய்திருந்தாலும் எல்லாவற்றிலும் சொல்லிக்கொள்ளும்படி நல்ல பெயர் எடுத்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், நீங்கள் சொன்னதை எல்லாம் தாண்டி எனக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அது நடனத்தில் எனக்கு இருக்கும் ஆர்வம்தான். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நடிப்பு, மேக்கப் ஆர்டிஸ்ட் என இதையெல்லாம் எனக்குத் தந்ததே நடனம்தான்.

அந்தத் திறமையை எனக்குள் கண்டறிந்து ஊக்கம் கொடுத்த பெற்றோருக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும். மல்டி டாஸ்கிங் என்பது இந்தக் காலத்தில் சாதாரண விஷயமாகி விட்டது. இன்னும் சொல்லவேண்டுமானால் அது அவசியமும் கூட. அதற்காக எல்லா நேரமும் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு செய்யச் சொன்னால் நிச்சயம் ரிசல்ட் சொதப்பும். சரியாக திட்டமிட்டுக் கொள்வேன். அதேபோல, பெண்களுக்கு நிச்சயம் பொருளாதார சுதந்திரம் வேண்டும். வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உங்களுக்கு பிடித்த வேலையைச் செய்யுங்கள்.

'பாக்கியலட்சுமி’ சீரியலில் உங்கள் வில்லத்தனத்துக்கு பயங்கர திட்டு வந்ததாமே..?

ரேமா அசோக்
ரேமா அசோக்

அய்யய்யோ! “ஒரு குடும்பத்தை கெடுத்துட்டியே”ன்னு வெளியில் நிறையப் பேர் திட்டித் தீர்த்துட்டாங்க. ஆனா, நான் நல்லா நடிச்சதுனால தான் அப்படி திட்டு கிடைச்சதுன்னு மனசை தேத்திக்கிட்டேன். இன்னொரு பக்கம் ஆன்லைன்லையும் பயங்கர திட்டுதான். இப்போ கொஞ்சம் பரவால்ல.

வழக்கமாக நாம நடிச்சுட்டு போறதை விடவும் இந்த மாதிரி நெகட்டிவ் ரோல் மக்கள் மனசுல இன்னும் ஆழமாக பதிஞ்சுடும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அது என் விஷயத்துலயும் நடந்துச்சு. ‘பாக்கியலட்சுமி’க்கு முன்னாடியும் சில சீரியல்கள் நடிச்சிருக்கேன். ஆனால், இந்த சீரியல்ல எனக்கான போர்ஷன் கம்மிதான். இருந்தாலும் அந்த கேரக்டர் செழியன் - ஜெனியை கோர்ட் வரைக்கும் கொண்டு போய் நிறுத்தினதால ரசிகர்களை ரொம்ப பாதிச்சிருச்சு போல!

2கே கிட்ஸூக்கு உங்க லவ் அட்வைஸ் என்ன?

ரேமா அசோக்
ரேமா அசோக்

லவ் அட்வைஸ் பண்ற அளவுக்கு எனக்கு அனுபவம் வந்துருச்சான்னு தெரியல. இருந்தாலும் எனக்கு சரின்னு தோணும் விஷயத்தை சொல்ல ஆசைப்படறேன். அம்மா, அப்பா நமக்கு எப்படியோ அப்படித்தான் காதலும் இருக்கணும். தொட்டதுக்கெல்லாம் சண்டை, பிரேக்கப் அப்படிங்கறது காதலுக்கு நல்ல விஷயம் கிடையாது.

முன்னாடி எல்லாம் லவ்- பிரேக்கப் என்ற இரண்டு டெர்ம் மட்டும் தான் இருந்தது. ஆனால், இப்போ புதுசா நிறைய வார்த்தைகள் உறவுகளையும் மாத்தி மாத்தி கொண்டு வராங்க. எந்த உறவு என்றாலும் சண்டை வருவது சகஜம்தான். அதற்காக விட்டு விட்டு போக வேண்டும் என்ற அவசியமில்லை. பிரச்சினைக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொண்டு பேசி தீர்த்துக் கொள்ளலாம். உறவில் விட்டுக் கொடுத்து போக வேண்டியதும் முக்கியம்.

அப்போ, ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் எந்தக்கட்டத்தில் இருக்கிறீர்கள்?

’நடந்தது அனைத்தும் நன்மைக்கே... போதும்பா சாமி’ என்ற கட்டத்தில் தான் இருக்கிறேன். முன்பே சொன்னதுபோல, இந்த 2கே கிட்ஸ் உறவுகள் அதற்கு அவர்கள் வைத்துக்கொள்ளும் வார்த்தைகளைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. காதலைப் பொறுத்தவரையில் நான் கொஞ்சம் அந்த காலத்து ஆள்தான்.

நிறைய நடன ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்கிறீர்கள். ’டிஆர்பி-க்காக சில சமயங்களில் சேனல்கள் எல்லை மீறுகின்றன’ என்பதான குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ரேமா அசோக்
ரேமா அசோக்

ரியாலிட்டி ஷோ என பெயர் வைத்துக்கொண்டு அங்கு பிரசங்கம் செய்ய முடியாது. அதற்காக நான் டிஆர்பி-க்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொல்லவில்லை. எதற்கும் ஒரு எல்லையுண்டு. ரியாலிட்டி ஷோ எனும் போது அங்கு புதுவித கான்செப்ட், நகைச்சுவை, கிரியேட்டிவிட்டி என செய்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. அது எல்லை மீறும்போதுதான் இந்த சர்ச்சைகள் எல்லாம். அதை சேனல் தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in