‘அடுத்த வாரிசு ரெடி’... அம்மாவை அழகில் மிஞ்சும் ரம்பா மகள்!

ரம்பா-லாவண்யா
ரம்பா-லாவண்யா

நடிகை ரம்பாவின் மகள் தன் அம்மாவையே அழகில் மிஞ்சும்படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சினிமாவுக்கு அடுத்த வாரிசு ரெடி என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

ரம்பா-லாவண்யா
ரம்பா-லாவண்யா

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவுக்கு வருவது புதிதல்ல. விஜயின் மகன் சஞ்சய், விக்ரம் மகன் துருவ், முரளி மகன் அதர்வா என அடுத்தடுத்து பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் நுழைந்த வண்ணமே இருக்கின்றனர். தொண்ணூறுகளில் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி, விஜய், அஜித் எனப் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் திருமணத்திற்குப் பிறகு இப்போது குடும்பம், குழந்தைகள், நடன ரியாலிட்டி நிகழ்ச்சி என பிஸியாக வலம் வருகிறார்.

என்னதான் சினிமாவில் இருந்து ரம்பா பிரேக் எடுத்திருந்தாலும் அவருக்கான கிரேஸ் இன்னும் ரசிகர்கள் மத்தியில் இருக்கதான் செய்கிறது. கடந்த 2010ம் ஆண்டு இந்திரகுமார் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இடையில் இவருடன் பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது. ஆனால், பின்னர் இந்த ஜோடி இணைந்தது. இவர்களுக்கு லாண்யா, சாஷா, என்கிற இரு மகள்களும் ஷிவின் என்கிற மகன் ஒருவரும் உள்ளனர்.

ரம்பா-லாவண்யா
ரம்பா-லாவண்யா

குடும்பத்துடன் தொடர்ச்சியாகத் தனது சமூகவலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் ரம்பா. இதில் மூத்த மகள் லாவண்யா அசப்பில் ரம்பாவைப் போலவே இருப்பார். இப்போது 13 வயதாகக் கூடிய லாவண்யா மாடர்ன் உடையில் ரம்பாவுடன் செம கியூட்டான புகைப்படங்களை எடுத்துள்ளார். இதை ரம்பா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்க, ‘சினிமாவுக்கு அடுத்த வாரிசு ரெடி’ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in