’ஜவான்’ படத்தால் அடித்த ஜாக்பாட்... சொகுசு கார் வாங்கிய பிரியாமணி!

குடும்பத்துடன் பிரியாமணி
குடும்பத்துடன் பிரியாமணி

நடிகை பிரியாமணி தற்போது சொகுசு கார் வாங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சியான விஷயத்தைத் தன் தாயுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். ரசிகர்கள் பிரியாமணிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


குடும்பத்துடன் பிரியாமணி
குடும்பத்துடன் பிரியாமணி

திரைத்துறையினர் புதிதாக வாங்கும் எந்தவொரு பொருளும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும். குறிப்பாக, புது கார் வாங்கிவிட்டால் அதன் விலை, மாடல் எனப் பல விஷயங்களை அக்குவேர் ஆணி வேறாக தேடி எடுத்துவிடுவார்கள் ரசிகர்கள். அப்படித்தான் பிரியாமணி வாங்கியுள்ள புதுகாரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

’பருத்திவீரன்’ படத்தில் முத்தழகாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை பிரியாமணி. இப்போது திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டி ஆகியுள்ளவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்துகிறார். இதுமட்டுமல்லாது, வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் பிரியாமணி. சமீபத்தில் ஷாருக்கானுடன் இவர் நடித்த ‘ஜவான்’ படம் ஹிட் ஆனது. அவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள ’ஆர்ட்டிக்கிள் 370’ மற்றும் ’பாமகலாபம் 2’ உள்ளிட்ட படங்களையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


குடும்பத்துடன் பிரியாமணி
குடும்பத்துடன் பிரியாமணி

இப்படி அடுத்தடுத்து அவருடைய படங்கள் ஹிட் ஆகி வரும் நிலையில், அதைக் கொண்டாடும் விதமாக புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் பிரியாமணி. தனது அம்மா மற்றும் குடும்பத்தினருடன் சென்று சொகுசு காரை வாங்கியுள்ளார். மெர்சடைஸ்- பென்ஸ் ஜிஎல்சி எனும் அந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ. 75 லட்சம் என்கிறார்கள். கார் வாங்கியதும் ஷோ ரூமில் கேக் வெட்டி குடும்பத்துடன் பிரியாமணி கொண்டாடி இருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...  
மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டுவிடும்... கனிமொழி எம்.பி., பேச்சு!

24 கேரட் தங்கத்தில் ரூ.3 கோடிக்கு பிறந்த நாள் கேக்... நடிகைக்கு பரிசாக வழங்கிய பிரபல பாடகர்!

கொடூரம்... 2 வயது குழந்தையைக் கடித்துக் கொன்ற தெருநாய்கள்!

ஓடும் ரயிலில் குத்தாட்டம்... இளசுகளின் ரீல்ஸ் மோகத்துக்கு எதிராக ரயில்வே மீண்டும் எச்சரிக்கை

கல்யாணம், கருமாதி, பிறந்த நாள்னு ரேபிஸ்ட்டுக்கு பரோல்... கொந்தளித்த பாடகி சின்மயி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in