சிக்கலில் பூனம் பாண்டே... போலியான இறப்பு செய்தியை பரப்பியதற்காக ரூ.100 கோடி கேட்டு வழக்கு!

பூனம் பாண்டே
பூனம் பாண்டே

தான் இறந்துவிட்டதாக போலியான செய்தி பரப்பியதற்காக நடிகை பூனம் பாண்டே மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் ரூ.100 கோடி அபராதமாகவும் கேட்கப்பட்டுள்ளது.

நடிகை பூனம் பாண்டே
நடிகை பூனம் பாண்டே

பாலிவுட்டில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் பூனம் பாண்டே (32). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கர்பப்பை வாய் புற்றுநோயால் காலமாகி விட்டதாக அவருடைய அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் செய்தி பகிரப்பட்டது. இதனால், அவர் இறப்பு உண்மை என்றே பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

ஆனால், அதற்கடுத்த நாளே தான் இறக்கவில்லை என்று பகீர் வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார் பூனம். கர்பப்பை வாய் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தான் இப்படி செய்ததாகவும் அவர் கூறினார். அவருடைய நோக்கம் சரியாக இருந்தாலும் அதைச் சொல்வதற்காக இப்படியா இறப்பு நாடகம் போடவேண்டும் எனப் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பூனம் பாண்டே, சாம் பாம்பே
பூனம் பாண்டே, சாம் பாம்பே

இந்நிலையில் பூனம் பாண்டே மற்றும் அவர் கணவர் சாம் பாம்பேவுக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு, கான்பூரில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஃபைசான் அன்சாரி என்பவர்தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ‘பூனம் பாண்டே, அவர் கணவர் சாம் பாம்பே ஆகியோர் சொந்த விளம்பரத்துக்கு இது போன்று செய்து கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையோடு விளையாடியுள்ளனர்’ என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதன் பேரில், பூனம் பாண்டேவுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இருந்தாலும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு பூனம் பாண்டே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் வழக்கு தள்ளுபடியாகவும் வாய்ப்புள்ளது என்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in