அம்மாவாகப் போகிறேனா... வீடியோ மூலம் பதில் கொடுத்த நடிகை பரினிதி சோப்ரா!

நடிகை பரினிதி சோப்ரா
நடிகை பரினிதி சோப்ரா
Updated on
1 min read

'சம்கிலா’ படத்தின் புரோமோஷனுக்காக நடிகை பரினிதி சோப்ரா சற்றே தளர்வான உடை அணிந்து வந்திருந்தார். இதைப் பார்த்தப் பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறார். அதை மறைக்கதான் அவர் இப்படி உடை அணிந்து வந்தார் என செய்திகள் வெளியிட்டனர். இதற்கெல்லாம் நடிகை பரினிதி வீடியோ பகிர்ந்து பதில் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பரினிதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சட்டாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆகி இருக்கும் நிலையில், பட வேலைகளில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் பரினிதி. பொது வெளியில் நடிகைகள் தளர்வான உடை அணிந்து வந்தால் அவர்கள் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவும்.

அப்படியான ஒரு சம்பவம்தான் பரினிதிக்கும் நடந்திருக்கிறது. அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘சம்கிலா’ படத்தின் புரோமோஷனுக்காக பலூன் வடிவிலான தளர்வான கருப்பு நிற கஃப்தான் உடை அணிந்து வந்திருந்தார் பரினிதி.

கணவருடன் நடிகை பரினிதி சோப்ரா
கணவருடன் நடிகை பரினிதி சோப்ரா

மேலும், அவர் முகமும் சற்றே பூசினாற் போல இருந்தது. இதைப் பார்த்தப் பலரும் ‘பரினிதி சோப்ரா அம்மாவாகப் போகிறார். கர்ப்பத்தை மறைக்கதான் அவர் இப்படி உடை அணிந்து வந்திருக்கிறார்’ எனக் கூறி வந்தனர். இதற்குதான் பரினிதி இப்போது சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து பதிலளித்திருக்கிறார்.

வெள்ளை நிறத்திலான ஃபிட்டான ஜீன்ஸ், ஓவர் கோட் உடையுடன் இந்த வீடியோவைப் பகிர்ந்து, ”நான் ஃபிட்டான உடைகளையே இனி அணிகிறேன். ஏனெனில், முன்பு கஃப்தான் உடை அணிந்த போது ’நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ எனப் பலரும் கூறி வந்தனர். அது உண்மை இல்லை” எனச் சொல்லி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in