எனக்கு உயிர் கொடுத்தது கேப்டன் தான்... நினைவிடத்தில் உருகிய நமீதா!

எனக்கு உயிர் கொடுத்தது கேப்டன் தான்... நினைவிடத்தில் உருகிய நமீதா!

தனக்கு உயிர் கொடுத்தது கேப்டன் விஜயகாந்த் தான் என அவரது நினைவிடத்தில் உருக்கமாக செய்தியாளர்களிடையே பேசினார் நடிகை நமீதா.

நடிகை நமீதா இன்று தன்னுடைய 43-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்தி, அன்னதானம் செய்தார். பின்பு இன்று மாலை மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று வணங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை நமீதா, “இன்று என் பிறந்தநாளையொட்டி கோயிலில் அன்னதானம், பூஜை செய்தேன். எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கேப்டன் மறைந்த சமயத்தில் என்னால் இங்கு வர முடியவில்லை. இன்று என் பிறந்தநாளின்போது கேப்டனின் ஆசீர்வாதம் வேண்டும் என்று இங்கு வந்திருக்கிறேன்.

கடவுளாக கருதும் அவர் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்துவது என்னுடைய பாக்கியம். தமிழ்நாட்டில் நமீதாவுக்கு உயிர் கொடுத்தது கேப்டன் விஜயகாந்த் தான். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவருக்கு பத்ம பூஷன் விருது கொடுத்தது மகிழ்ச்சி. எப்போதும் படப்பிடிப்புத் தளத்தில் சுறுசுறுப்பாக கிங் மாதிரி இருப்பார்” என்றார்.

'எங்கள் அண்ணா’ படத்தில்...
'எங்கள் அண்ணா’ படத்தில்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in