நடிகை மம்தா மோகன்தாஸ் புது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை மம்தா மோகன்தாஸ் தமிழில் நடிகர் விஷாலின் 'சிவப்பதிகாரம்’ படம் மூலமாக அறிமுகமானார். இப்போது நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகி வரக்கூடிய ‘மகாராஜா’ படத்திலும் அவர் நடித்துள்ளார். படங்களில் நடிப்பது மட்டுமல்லாது பின்னணிப் பாடகியாகவும் இவர் வலம் வருகிறார்.
'வில்லு’ படத்தில் டாடி மம்மி பாடல், ’கோவா’ படத்தில் இடைவழி போன்ற பாடல்களையும் அவர் பாடியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தவர், இப்போது ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் கூறினார். இருந்தாலும் தனது தன்னம்பிக்கையைக் கைவிடாது தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வருகிறார் மம்தா.
தற்போது மம்தா பிஎம்டபிள்யூ இசட்4 ஸ்போர்ட்ஸ் காரை (BMW Z4 Sports Car) வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு ரூ. 1 கோடிக்கும் அதிகம் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 90.90 லட்ச ரூபாய் ஆகும். இத்தகைய காஸ்ட்லியான காரையே நடிகை தற்போது வாங்கி இருக்கிறார். இது ஓர் 2 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க ரைடர் மட்டுமே என்ஜாய் செய்து பயணிக்கும் பொருட்டே இந்த வாகனத்தை பிஎம்டபிள்யூ வடிவமைத்திருக்கிறது. இந்த சொகுசு கார் வாங்கும்போது நடிகை மம்தா கேக் வெட்டி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!
வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!
பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!