அது மில்லியன் டாலர் கேள்வி... ’தங்கலான்’ அப்டேட் கொடுத்த மாளவிகா!

நடிகை மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படம் எப்போது வெளியாகும் என நடிகை மாளவிகா மோகனனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதற்கு அவர் பதிலளித்துள்ளார்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘தங்கலான்’. கோடைக் கொண்டாட்டமாக இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலைக் காரணம் காட்டி வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

நடிகை மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன்

படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், பட ரிலீஸ் எப்போது என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இப்படியான சூழ்நிலையில்தான், படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தனது எக்ஸ் பக்கத்தில் ‘ஆஸ்க் மாளவிகா’ என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் கலந்துரையாடி இருக்கிறார்.

அதில் ரசிகர் ஒருவர் ‘தங்கலான்’ படத்தில் ரிலீஸ் எப்போது எனக் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு மாளவிகா, ‘அது மில்லியன் டாலர் கேள்வி. உங்களைப் போலவே எனக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரமான ஆர்த்திக்கு நானே முதல் முறையாக டப்பிங் பேசியுள்ளேன். உங்கள் ரெஸ்பான்ஸ் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன்

அதுபோலவே, லேடி கேங்க்ஸ்டராக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார். கிளாமர் ஃபோட்டோஷூட் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அது தனக்குப் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார் மாளவிகா.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in