வாய்ப்பு வாங்கித் தருவதாகச் சொல்லி அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைப்பார்கள்! - நடிகை லாவண்யா பேட்டி

லாவண்யா
லாவண்யா

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகை லாவண்யா. நடிகை சித்ராவில் ஆரம்பித்து காவ்யாவுக்குப் பிறகு அந்த சீரியல் முடியும் சில மாதங்களுக்கு முன்பு முல்லையாக சீரியலில் என்ட்ரி கொடுத்தவர் லாவண்யா. இந்த சீரியல் முடிந்த பிறகு ‘வேற மாரி ஆஃபீஸ்’ என்ற வெப்சீரிஸில் நடித்தார். அவரிடம் காமதேனு டிஜிட்டலுக்காகப் பேசினோம்.

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு முன்னும் பின்னும் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

சூப்பராக இருக்கிறது. இப்போது வெளியிடத்தில் போனால் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு வந்து வாழ்த்துகிறார்கள், என்னிடம் பேசுகிறார்கள்! இதுவே எனக்கு பெரிய விஷயம். ஏனெனில், நான் ஒரு தனியார் வங்கியில் ஒன்றரை வருடங்கள் பணிபுரிந்து கொண்டிருந்தேன். ஆனால், நமக்கு எந்த விஷயம் பிடிக்குமோ அதுதானே நம்மை ஈர்க்கும். அப்படித்தான், எனக்கு மாடலிங்கும் நடிப்பும். உள்ளுக்குள்ளே அந்த எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.

மாடலிங் பற்றி பெரிதாக எனக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. அதேசமயம், குடும்ப சூழலுக்கும் என் சம்பாத்தியம் தேவைப்பட்டது. அதனால், ஏர்ஹோஸ்டஸ் முயன்று பார்த்தேன். அதிலும் அட்ஜெஸ்ட்மென்ட் என ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தது. பின்பு, அம்மாவுடன் சேர்ந்து சேலை பிசினஸ் செய்ய ஆரம்பித்து மாடலிங், நடிப்பிற்குள் வந்தேன்.

குடும்பத்தில் உங்கள் நடிப்பிற்கு உடனே ஆதரவு கொடுத்தார்களா?

லாவண்யா
லாவண்யா

இல்லையே... எங்கள் வீட்டில் பெண்கள் படித்து முடித்த உடனேயே கல்யாணம்தான். எனக்குக் கிடைத்த பேங்க் வேலைக்குக் கூட போகக்கூடாது என்று சொன்னார்கள். நான் எந்தவொரு விஷயம் புதிதாக ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னாலும் உடனே, எங்கள் வீட்டில் இருந்து வரும் பதில் “வேண்டாம்” என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால், ஒருகட்டத்திற்கு மேல் என்னை புரிந்து கொண்டார்கள். நான் எடுக்கும் முடிவும் சரியாகத்தான் இருக்கும் என நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். அப்புறம் எல்லாம் ஓகே ஆனது!

நடிப்புத் துறைக்குள் வந்தாச்சு. இங்கு நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

லாவண்யா
லாவண்யா

நடிப்புத் துறைக்கு நாம் புதிது எனும்போது, நம்மை சிக்கலில் இழுத்துவிட நிறையப் பேர் காத்திருப்பார்கள். வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று சொல்லி நம்மை அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைப்பார்கள். நானே இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். ஆனால், அந்த சமயத்தில் தைரியமாக வேண்டாம் என மறுத்திருக்கிறேன்.

அப்படி போய்த்தான் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதில்லை. ஒருவேளை, நடிப்பு இல்லை என்றாலும் என்னை பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும் என்ற நம்பிக்கை எப்போதுமே உண்டு. இங்கு எனக்கான இடத்தைப் பிடித்ததும் சில விஷயங்கள் காயப்படுத்தியது. அதாவது, நடிப்புத் துறைக்குள் என் நடிப்பை குறித்து விமர்சனம் வந்தால் ஏற்றுக் கொள்வேன். ஆனால், என் குரல் வைத்தும் முன்பெல்லாம் கேலி செய்வார்கள். அது கஷ்டமாக இருந்தது. மீடியாவுக்கு வருவதற்கு முன்னால் கூட என் குரல் குறித்து தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஆனால், இந்த கேலிகளைப் பார்த்த பின்பு என் குரல் மீது தனி மரியாதை வந்துவிட்டது.

’பாண்டியன் ஸ்டோர்ஸ்2’ சீரியலுக்கு உங்களுக்கு அழைப்பு வரவில்லையா?

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் பாகமே எனக்கு அதிக புகழைக் கொடுத்தது. இரண்டாம் பாகத்தில் அழைப்பு வந்ததா வரவில்லையா என நிறைய பேர் கேட்டார்கள். கதாபாத்திரத்திற்கு நான் சரியாக இருப்பேன் என்று அவர்கள் நினைத்திருந்தால் என்னைக் கூப்பிட்டு இருக்கலாம். அதனால், அதில் எனக்கு வருத்தமில்லை. இப்போது இரண்டாம் பாகத்திற்கு வாழ்த்துகள்!

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in