நான் கர்ப்பமில்லை; இது வேற பிரச்சினை... நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

 கிருத்திகா கெய்க்வாட்
கிருத்திகா கெய்க்வாட்

மராத்தி நடிகை கிருத்திகா கெய்க்வாட் தனது சமூகவலைதளங்களில் வெளியிட்ட வீடியோ பேசுபொருளாகியுள்ளது. அதில் தான் கருப்பை நார் திசுக்கட்டிகள் என்ற மருத்துவ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சமூகவலைதளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு நடிகைகள் பலரும் தங்கள் உடல் உபாதைகள் குறித்தான விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து அதுகுறித்தான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். நடிகைகள் சமந்தா மையோசிடிஸ் பற்றி, ஷமிதா ஷெட்டி கர்பப்பை சுற்றி இருந்த தசைநார் சிகிச்சை, சமீரா ரெட்டி அலோசீமியா நோய் பற்றி பேசியது என சமீபத்திய உதாரணங்கள் நிறைய சொல்லலாம்.

இந்த வரிசையில், மராத்தி நடிகை கிருத்திகா கெய்க்வாடும் இணைந்திருக்கிறார். தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு தனது உடல்நிலை பற்றி பேசியிருந்தார். அதாவது, கிருத்திகா வெளியிட்டிருந்த வீடியோவில் அவரது வயிறு வீங்கி இருந்தது.

இதைப் பார்த்த ரசிகர்கள், ’அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ?’ என்று நினைக்க, ‘இல்லை, இல்லை...’ என்று சொல்லி தனது பிரச்சினை குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார் கிருத்திகா.

அதாவது, இப்படி தன் வயிறு வீங்கி இருப்பதற்குக் காரணம் கருப்பை நார் திசுக்கட்டிகள் என்று கூறியுள்ளார். இதுபற்றி மேலும் அவர் பகிர்ந்திருப்பதாவது, “இது பல ஆண்டுகளாக உருவாகும் கருப்பை நார் திசுக்கட்டிகள்! நார்த்திசுக்கட்டிகள் என்றால் கருப்பையின் சுவரில் வளரும் தசைக் கட்டிகள் ஆகும். இவற்றை ஃபைப்ராய்டுகள் என்று சொல்வார்கள். இது தீங்கற்றவை. புற்றுநோய் என்று பயப்பட வேண்டாம். நார் திசுக்கட்டிகள் உள்ள அனைத்து பெண்களும் இந்த நோயால் பாதிக்கப்படுவது கிடையாது.

கிருத்திகா கெய்க்வா
கிருத்திகா கெய்க்வா

இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகப்படியான வலி மற்றும் அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு இருக்கும். கர்பப்பையில் இவற்றின் வளர்ச்சி சில சமயம் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கும். இல்லையெனில், ஒரு சில திராட்சைப்பழ அளவுக்கு பெரியதாக இருக்கும்.

மிகவும் பெரியதாக இருக்கும் ஒரு நார் திசுக்கட்டி கருப்பையின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் சிதைக்கும். இது இன்னும் தீவிரமானால், இடுப்பு அல்லது வயிற்றுப் பகுதியை நிரப்பும் அளவுக்கு பெரியதாக வளரும். பார்க்கும்போது, கர்ப்பமாக இருப்பது போல தோன்றும். அதனால், பெண்களே விழிப்புடன் இருங்கள்! தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்” என்று அவர் நீண்ட பதிவைப் பகிர்ந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in