கவர்ச்சி படங்களைப் பகிர்வதால் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கிரண் அதிர்ச்சி பேட்டி!

நடிகை கிரண்
நடிகை கிரண்

சமூகவலைதளங்களில் கவர்ச்சியானப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறேன். இதனாலேயே பலர் என்னைப் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என நடிகை கிரண் வேதனைத் தெரிவித்துள்ளார்.

நடிகை கிரண்
நடிகை கிரண்

சமூகவலைதளங்களில் பல பெண்கள் பகிரும் கவர்ச்சிப் படங்களை வைத்தே அவர்களது குணாதிசயத்தை மதிப்பிடுவதும் இழிவாகப் பேசுவதும் இங்கே பார்க்க முடிகிறது. குறிப்பாக, திரைத்துறை நடிகைகள் இதுபோன்ற விஷயத்தை அதிகம் எதிர்கொள்கிறார்கள். அப்படியாகத் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நடிகை கிரண்.

நடிகர் விக்ரமின் ‘ஜெமினி’ படம் மூலமாகத் தமிழ் திரையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை கிரண். அதன் பிறகு ‘வில்லன்’, ‘அன்பே சிவம்’, ‘ வின்னர்’ போன்றப் படங்களில் நடித்தார். ‘திருமலை’ படத்தில் நடிகர் விஜயுடன் கவர்ச்சிக் குத்தாட்டமும் போட்டார் கிரண். இடையில் சில நாட்கள் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

தற்போது கோவாவில் வசித்து வரும் கிரண், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக உச்சக்கட்ட கவர்ச்சியில் ரீல்ஸ், புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை மீண்டும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தான் சினிமாவில் இருந்து இடையில் காணாமல் போனதற்கு முக்கியக் காரணம் காதல் தோல்வி எனத் தனது சமீபத்தியப் பேட்டியில் கூறியுள்ளார் கிரண்.

நடிகை கிரண்
நடிகை கிரண்

மேலும், சினிமாவில் அக்கறை இருப்பது போல நடிப்பார்கள். ஆனால், இரவு படுக்கைக்கு வா என மோசமாக நடந்து கொள்வார்கள் எனவும் கூறியுள்ளார். சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வருவது பற்றி அவர் கூறியிருப்பதாவது, “எனக்கென ஒரு செயலி தொடங்கி அதில் கிளாமர் போட்டோஸ், வீடியோக்களை பதிவு செய்தேன். அதை பார்த்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லோரும் என்னைப் படுக்க அழைத்தார்கள். சமூகவலைதளங்களில் நான் கவர்ச்சி படங்களைப் பகிர்வதால் அவர்கள் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். 

 கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே கவர்ச்சியாகதான் புகைப்படங்களைப் பகிர்கிறார்கள். எனக்குப் பிடித்த ஆடைகளை உடுத்தி நான் போட்டோக்களை பதிவிடுகிறேன். இதில் என்ன தவறு? நான் ஒன்றும் ஆபாச படத்தில் நடிக்கவில்லையே” என்று வேதனை தெரிவித்துள்ளார் கிரண்.

இதையும் வாசிக்கலாமே...


அடுத்தடுத்து பெயர்ச்சியாகும் கிரகங்கள்... ஒரே நாளில் நவக்கிரக சுற்றுலாவுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம்!

அண்ணன் பேச்சை அண்ணனே கேட்கமாட்டாரு... சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கூகுள் பே சேவை ஜூன் 4 முதல் நிறுத்தம்...பயனாளர்கள் அதிர்ச்சி!

ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு... அதிர்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ்... கே.பி.ராமலிங்கம் சொல்லும் கணக்கு நடக்குமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in