கீர்த்தி பாண்டியன் வீட்டில் விசேஷம்... குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

நடிகர் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன்
நடிகர் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன்

நடிகர் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஜோடி திருநெல்வேலியில் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறது. கீர்த்தியின் தாத்தாவுக்கு 95-வது பிறந்தநாளாம். அதற்காகத் தான் இந்தக் கொண்டாட்டம்.

நடிகை கீர்த்தி பாண்டியனின் தாத்தாவுக்கு இந்த ஆண்டு 95-வது பிறந்தநாள். அதை திருநெல்வேலியில் உள்ள சொந்த வீட்டில் குடும்பமே ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இந்த வீடியோவை கீர்த்தியின் அக்கா கவிதா பாண்டியன் பகிர்ந்துள்ளார். வீட்டில் எளிமையாக நடந்த இந்தக் கொண்டாட்டத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், கவிதா பாண்டியன், அருண் பாண்டியன் என கீர்த்தியின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர்.

ஊரில் விவசாயம் பார்த்து மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் கீர்த்தியின் தாத்தா 100-வது பிறந்தநாளையும் இப்படி குடும்பத்தோடு கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

நடிகை கீர்த்தி பாண்டியன்
நடிகை கீர்த்தி பாண்டியன்

அசோக் செல்வன், கீர்த்தி இருவரும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். அசோக் செல்வன் தற்போது நடிகர் கமல்ஹாசனின் ‘சத்யா’ பட ரீமேக்கில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. அதற்காகவே, தலைமுடி, தாடி எல்லாம் வளர்த்து வருகிறார். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமாக அவர் உறுதி செய்வார் என எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in