அம்பானி மகன் திருமணத்தில் பிரபலங்கள் நடனம்... கடுமையாக விமர்சித்த நடிகை கங்கனா!

நடிகை கங்கனா ரனாவத்...
நடிகை கங்கனா ரனாவத்...

அம்பானி வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பிரபலங்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்காக அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வாரியிறைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நடிகை கங்கனா காட்டம் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டமாக ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் கடந்த மார்ச்1ல் இருந்து மார்ச்3 வரை நடைபெற்றது. இதற்காக, பாலிவுட்டில் இருந்து பல முக்கிய பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதில் ஹாலிவுட் பாடகி ரிஹானா கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்வித்தார்.

இதற்காக இவருக்கு ரூ. 50 முதல் ரூ. 75 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதுமட்டுமல்லாது, நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் மேடையில் நடனம் ஆடி அசத்தினர். நடனத்திற்காகவும், நிகழ்வில் பங்கேற்கவும் அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வாரியிறைக்கப்பட்டது என்ற செய்தி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நடிகை கங்கனா மிஸ் ஆனார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

இதனால், கங்கனாவுக்கு அழைப்பு போகவில்லையா என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கங்கனா இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, ‘பிரபல பாடகி லதா மங்கேஷ்வர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் திருமண நிகழ்ச்சியில் பாட மாட்டேன் என்பதைக் கொள்கையாக வைத்திருக்கிறார். அதுபோலதான் நானும். பணம் இல்லாத எவ்வளவோ கடினமான சூழ்நிலைகளை நான் கடந்து வந்திருக்கிறேன். ஆனாலும் நான் திருமண நிகழ்ச்சிகளில் ஆடி, பாடுவதை விரும்பவில்லை.

கடினமான சூழலில் பணம் வரும்போது அது தேவையில்லை என்று மறுப்பதற்கு வலிமை வேண்டும். இந்த விஷயத்தை இன்றைய தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டும். குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்கக் கூடாது’ எனக் கூறியுள்ளார் கங்கனா.

இதையும் வாசிக்கலாமே...  

எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பு... தேசிய மகளிர் தினத்தில் பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு

பகீர்... துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: சென்னையில் ரவுடிகள் 2 பேர் கைது!

சிக்கலில் திமுக... உதயநிதியை வளைக்கும் வியூகத்தில் மத்திய சக்திகள்?

ஷாக்... இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள், தாய் உள்பட 6 பேர் குத்திக்கொலை: கனடாவில் பயங்கரம்!

ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை துவங்கும் திமுக, அதிமுக... முதல் பட்டியலை வெளியிடப்போவது யார்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in