சினிமாவைப் போல அரசியலிலும் வெற்றி பெறுவேன்... வேட்பு மனுவை தாக்கல் செய்து கங்கனா நம்பிக்கை!

பிரச்சாரத்தில் கங்கனா...
பிரச்சாரத்தில் கங்கனா...

”சினிமாவைப் போல அரசியலிலும் வெற்றி பெறுவேன்” என நடிகையும் இமாச்சலபிரதேசம், மண்டி தொகுதி பாஜக வேட்பாளருமான கங்கனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகள் மற்றும் அம்மாநிலத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இமாச்சலில் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை கங்கனா போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கல் செய்த கங்கனா
வேட்புமனு தாக்கல் செய்த கங்கனா

கங்கனாவை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மகன் விக்ரமாதித்யா சிங் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனு தாக்குதல் தொடங்கிய நிலையில் நடிகை கங்கனா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்பு ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் தனக்கான வெற்றி வாய்ப்பு குறித்தும் பேசினார். அப்போது அவர், ”பாலிவுட்டில் வெற்றி பெற்ற நான், அரசியலிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

கங்கனா
கங்கனா

மண்டி தொகுதியில் வேட்பாளராக கங்கனா பிரச்சாரம் செய்து வருவதில் இருந்தே அவருடைய பேச்சுகள் இணையவெளியில் கேலிக்குள்ளானது. அதாவது, மோடி 2014-ல் பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது, அமிதாப்பச்சன் போல தனக்கு மட்டும்தான் மக்கள் மத்தியில் அன்பு கிடைக்கிறது என பல விஷயங்களைப் பேசி இணையவெளியில் கிண்டலுக்கு ஆளாகி வருகிறார் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in