முதல் படம் ப்ளாப்... வாய்ப்புகளும் கிடைக்கலை; மனம் திறந்த நடிகை ஜோதிகா!

 நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா

பாலிவுட்டில் இத்தனை வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தது ஏன் என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளின் இறுதியில் தனது துறுதுறு நடிப்பால் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஜோதிகா. சூர்யாவுடன் காதல், திருமணம், தனது குடும்பம், குழந்தைகள் என்று சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தவர் ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா

தொடர்ந்து கதாநாயகிகளை மையப்படுத்திய கதைகளில் நடித்து வந்த நிலையில், இப்போது பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். மும்பையை சேர்ந்த ஜோதிகா, சினிமாவில் அறிமுகமானதே பாலிவுட்டில்தான். ஆனால், பாலிவுட்டில் நடிக்காமல் தொடர்ந்து தென்னிந்திய நடிகையாக முன்னிலை வகித்தார்.

இப்போது தனது குழந்தைகளின் படிப்பிற்காக தனது சொந்த ஊரான மும்பையில் செட்டில் ஆகியிருப்பவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ‘ஸ்ரீகாந்த்’ படம் வெளியாகி இருக்கிறது. இதற்காக ஊடகங்களை அவர் கடந்த சிலநாட்களாக சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவரிடம் ’ஏன் இத்தனை வருடங்கள் பாலிவுட்டில் நடிக்கவில்லை?’ என்று கேட்கப்பட்டது.

ஜோதிகா
ஜோதிகா

அதற்கு அவர், “ஹீரோயினுக்கு முதல் படம் ஹிட்டடித்தால் மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும். பாலிவுட்டில் என்னுடைய முதல் படம் ஹிட்டாகவில்லை. அடுத்து எனக்கு தொடர்ச்சியாக தமிழில் வாய்ப்புகள் கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். இதனால், பாலிவுட்டில் இருந்தவர்களும் என்னை தென்னிந்திய பெண் என்றே நினைத்தனர்.

பாலிவுட்டில் நான் நடிக்க மாட்டேன் என்றே முடிவு செய்து விட்டார்கள். எனக்கும் இத்தனை காலம் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. அதனால்தான், இந்த இடைவெளி” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in