வைரலாகும் வீடியோ... ஷாருக் மகனுடன் ஐஸ்வர்யா ராய் மகள் செம ஆட்டம்... குவியும் வாழ்த்துகள்!

வைரலாகும் வீடியோ... ஷாருக் மகனுடன் ஐஸ்வர்யா ராய் மகள் செம ஆட்டம்... குவியும் வாழ்த்துகள்!

நடிகர்கள் ஐஸ்வர்யாராய்- அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யாவின் பள்ளி ஆண்டு விழாவில், ஷாருக் மகனுடன் ஆராத்யா மேடையில் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. வருங்காலங்களில் இந்த ஜோடி திரையுலகிலும் கலக்குவார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தப்படி வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்நிகழ்வை, ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், அமிதாப், ஜெயா பச்சன் என மொத்த குடும்பத்தினரும் நேரில் சென்று ரசித்த நிலையில், தங்களது விவாகரத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் அபிஷேக் - ஐஸ்வர்யா ஜோடி.

கடந்த சில நாட்களாகவே ஐஸ்வர்யாராய்- அபிஷேக் பச்சன் ஜோடி விவாகரத்து பெறப்போகிறது என்ற செய்தி ரசிகர்களை கலங்கடிக்கச் செய்து வந்த நிலையில், ஆராத்யாவின் பள்ளி ஆண்டு விழாவில், நாடகம் ஒன்றில் நடித்துள்ளார் ஆராத்யா. கூடவே அதே பள்ளியில் படிக்கும் ஷாருக் மகனுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.

12 வயதாகும் ஆராத்யா முன் நெற்றியில் பாதி கட் செய்த முடியுடன்தான் வலம் வருவார். ஆனால், இந்த வீடியோவில் கதாபாத்திரத் தேவைக்காக தூக்கி சீவிய தலைமுடியுடன் மேக்கப் போட்டு, மேடையில் சிறிதும் பயம் இல்லாமல் தெளிவாக வசனம் பேசி, திறமையாக நடித்து அசத்தியுள்ளார்.

ஆராத்யாவின் நடிப்பைப் பார்த்து ஐஸ்வர்யா ராய் பூரிப்புடன் அதை வீடியோவாக பதிவு செய்கிறார். மேலும், ஐஸ்வர்யாவின் அம்மா, கணவர் அபிஷேக் பச்சன், நாத்தனார் ஸ்வேதாவின் மகன் அகஸ்தியாவுடன் அமர்ந்து நாடகத்தை பார்த்து ரசித்தார் ஐஸ்வர்யா ராய்.

‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா?’ எனவும், ‘பாலிவுட்டுக்கு அடுத்த வாரிசு ரெடி’ எனவும் பலரும் ஆராத்யாவின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர். ஆராத்யாவை கட்டித் தழுவி, முத்தம் கொடுத்து தனது பாராட்டையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா. மேலும், அபிஷேக்குடன் ஒன்றாக வந்ததன் மூலம் தனது விவாகரத்து செய்திக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் எனவும் சொல்லி வருகின்றனர் ரசிகர்கள்.

ஷாருக் மகனுடன், ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா நடனமாடியதை, நடிகர் ஷாருக்கானும் நெகிழ்ச்சியுடன் நேரில் பார்த்து ரசித்தார். இந்த ஜோடி, வருங்கால திரையுலகில் பேசப்படும் ஜோடியாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே ஷாருக் - ஐஸ்வர்யா படங்களின் காம்போக்களைப் பதிவிட்டு, இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


‘அவரை எப்படி பார்த்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும்...' ஆவேசமாக பதிலளித்த பிரேமலதா!

வெள்ளக்காடாக மாறிய கன்னியாகுமரி; தண்ணீரில் மிதக்கும் தென் தமிழகம்!

தொடரும் கனமழை... தென் மாவட்ட ரயில்கள் ரத்து! இறக்கிவிடப்பட்ட பயணிகள் தவிப்பு!

150 ஆண்டுகளுக்கு பிறகு... தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த பெருமழை!

ப்பா... இணையத்தை தெறிக்க விட்ட பீஸ்ட் நாயகி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in