உச்சக்கட்ட கவர்ச்சியில் இணையத்தைத் தெறிக்க விடும் 'பீஸ்ட்' நாயகி!

காமதேனு

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் 'முகமூடி' திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

ஆனால், முதல் படமே தோல்விப் படமாக அமைய அதன் பிறகு, தெலுங்கில் கவனம் செலுத்தினார் நடிகை பூஜா ஹெக்டே.

’அலாவைகுந்தபுரமுலு’, ‘ரங்கஸ்தலம்’ என அங்கு பல படங்கள் இவருக்கு ஹிட்டடித்தது.

அதன் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘பீஸ்ட்’ மூலம் தமிழுக்கு வந்தார்.

ஆனால், இந்த முறையும் தோல்வியே தமிழ் சினிமா இவருக்குத் தந்தது.

இப்போது தமிழ், தெலுங்கு தாண்டி இந்தியிலும் படங்களில் நடித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே.

சமீபத்தில் இவர் சல்மான் கானுடன் நடித்த ‘கிஸி கா பாய் கிஸி கா ஜான்’ என்ற படம் இந்தியில் வெளியானது.

தற்போது உடல்நிலை காரணமாக சிறிய பிரேக் எடுத்துள்ள நடிகை பூஜா ஹெக்டே ‘தேவா’ என்ற இந்திப் படத்தை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.