ரஜினிக்கு தலித் அரசியல் தெரியாது... விளாசிய நடிகை ஆர்த்தி!

ரஜினிக்கு தலித் அரசியல் தெரியாது... விளாசிய நடிகை ஆர்த்தி!

நடிகர் ரஜினிகாந்துக்கு தலித் அரசியல் தெரியாது என்றும் இயக்குநர் பார்வையைத்தான் அவர் பிரதிபலித்துள்ளார் என்றும் நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகை ஆர்த்தி, தற்போது பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக தேர்தல் பரபரப்பில் இருக்கிறார். பிரச்சாரத்துக்கு நடிவே ‘காமதேனு’ டிஜிட்டலுக்காக அவரிடம் பேசினோம்.

அண்ணாமலையின் அரசியல், நடிகர் ரஜினி- இயக்குநர் இரஞ்சித் சர்ச்சை, விஜயின் அரசியல் பிரவேசன் எனப் பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

அவர் பேசியிருப்பதாவது, “திராவிடக் கட்சிகள் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் நடந்து கொள்ளவில்லை. 2021-ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் என்ன வாக்குறுதிகள் கொடுத்தாரோ அதை செய்யவில்லை. அதையேதான் 2024-ம் ஆண்டும் வாக்குறுதிகளாகக் கொடுத்துள்ளார்.

முக்கியமாக, பிஜேபிக்கு பிரதமர் வேட்பாளர் மோடி என்பதை அறிவித்து விட்டோம். ஆனால், இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதையே அறிவிக்கவில்லை. இதுவே மக்களுக்குப் பெரிய குழப்பம்”

என்று சொல்லி இருக்கிறார் ஆர்த்தி.

ரஜினிக்கு தலித் அரசியல் தெரியுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு இயக்குநர் இரஞ்சித் சிரித்தது சர்ச்சையானது குறித்து கேட்டதற்கு “ஆமாம்! ரஜினிக்கு தலித் அரசியல் தெரியாது. அவருடைய கதாபாத்திரம் என்ன பேச வேண்டும் எப்படியான நடிப்பு வேண்டும் என இயக்குநர் எதிர்பார்க்கிறாரோ அப்படித்தான் ஒரு நடிகர் நடிக்க முடியும்.

அதைத்தான் ரஜினியும் செய்திருக்கிறார். அவர் ஒரு கட்சியின் தலைவராக இருந்தால் மற்றவர்கள் மனது புண்படுமா என ரஜினி யோசித்து இருக்கலாம். ஆனால், ஒரு நடிகராக அவர் முழு நேரமாக அதைப் பற்றியே யோசிக்க முடியாது” என்றார்.

ஆர்த்தி கணேஷ்
ஆர்த்தி கணேஷ்

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் பாஜகவை பின்னுக்குத் தள்ளுவார் என்று வெளியான கருத்துக்கணிப்பு குறித்து கேட்டதற்கு, “சினிமாவில் இப்போது நம்பர் 1 இடத்தில் இருக்கும் விஜய் அந்த இடத்தை விட்டுவிட்டு சினிமாவுக்கு வருகிறேன் என்று சொல்லி இருப்பது தைரியமான முடிவு. அண்ணாமலை அண்ணன் ஐபிஎஸ் படித்தவர். அவருக்கு சட்டம் தெரியும்.

மிகுந்த அறிவு இருக்கு. இந்த அளவுக்கு அறிவு விஜய்க்கு இருக்கிறதா என்பது இனிமேல் அவருடைய பிரஸ் மீட், செயல்பாடுகளில்தான் தெரிய வரும். என்னைக்கேட்டால், 2026-ல் சிறந்த முதல்வர் வேட்பாளர், வருங்கால பிரதமர் வேட்பாளர் அண்ணாமலை அண்ணன் தான்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   

அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

பிரதமர் மோடியை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி பலி!

டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த மணல் லாரி... மணலில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in