வேலூரில் பரபரப்பு... என் சின்னத்தை மறைச்சுட்டீங்க... நடிகர் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!

வேலூரில் பரபரப்பு... என் சின்னத்தை மறைச்சுட்டீங்க... நடிகர் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!

வேலூரி தொகுதியில், தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லாமல் மறைக்கப்பட்டு விட்டது என நடிகர் மன்சூர் அலிகான் வாக்குச்சாவடியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் மன்சூர் அலிகான் டிஸ்சார்ஜ் ஆனார். இவர் வேலூர் மாவட்டத்தில் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். இன்று காலை நடிகர் மன்சூர் அலிகான், தான் போட்டியிடும் வேலூர் தொகுதியில் , வாக்குகள் பதிவாகும் இடங்களை பார்வையிட்டார்.

சில இடங்களில் சின்னங்கள் தெரியாதவாறு, வாக்குகள் பதிவு செய்யும் இயந்திரங்கள் இருட்டில் உள்ளதை கண்டித்து, வேறு இடங்களில் வைக்க சொல்லி வாக்குச்சாவடியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் தனது சின்னம் பொறிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் பகுதியில் வெளிச்சம் இல்லாததால் தனது பலாப்பழச் சின்னம் மறைக்கப்பட்டு இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் குற்றம் சாட்டினார்.

கொணவட்டம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டார். பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் வெளிச்சம் போதிய அளவு இல்லாததால் வாக்களிக்க வரும் பொதுமக்கள் சரியான முறையில் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

மேலும், “வாக்களிக்கும் இயந்திரம் இரண்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் முதல் இயந்திரம் இருக்கும் பகுதியில் மட்டும் வெளிச்சம் நன்றாக தெரிகிறது. மற்றொரு இயந்திரம் இருக்கும் பகுதியில் வெளிச்சம் தெரியவில்லை. உடனே இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in