#Election2024 | நல்ல தலைவர் கிடைக்க வாக்களிக்கணும்... நடிகர் யோகிபாபு பேட்டி!

#Election2024 | நல்ல தலைவர் கிடைக்க வாக்களிக்கணும்... நடிகர் யோகிபாபு பேட்டி!

இன்று காலை சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் யோகிபாபு தனது மனைவியுடன் வந்து வாக்களித்த பின்னர், ”நாட்டிற்கு நல்ல தலைவர்கள் கிடைக்க வாக்களிக்க வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

நகைச்சுவை நடிகர் யோகிபாபு அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் இன்று காலை, வளசரவாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும். அனைவரும் ஓட்டு போட்டு நாட்டை காக்க வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக செய்தியாளர்கள், அவரை பொறுமையாக நடந்து வர கூறியதை அடுத்து, ”இவ்வளவு பொறுமையாக சென்றால் மாலை தான் வாக்கு செலுத்த வேண்டும்” என தனது நகைச்சுவை பேச்சால் அந்த இடத்தை கலகலப்பாக்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மக்களுக்கு நல்ல தலைவர் வேண்டும். இதற்காக அனைவரும் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும்! நாட்டை காக்க வேண்டும்!” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in