நெகிழ்ச்சி... யோகிபாபு மகள் பிறந்தநாளுக்கு அசத்தல் பரிசு கொடுத்த விஷால்!

யோகிபாபு மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஷால்
யோகிபாபு மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஷால்

சமீபத்தில் நடிகர் யோகிபாபு மகளின் முதலாவது பிறந்தநாளில் கலந்து கொண்ட நடிகர் விஷால் குழந்தைக்கு கொடுத்துள்ள அசத்தல் பரிசு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் யோகிபாபுவின் மகள் பரணி கார்த்திகாவின் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, விஷால், குஷ்பு எனப் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஷால் யோகிபாபுவின் குழந்தை பரணி கார்த்திகாவிற்கு கொடுத்துள்ள பரிசுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யோகிபாபு மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்...
யோகிபாபு மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்...

பொதுவாக நண்பர்களின் பிறந்தநாளுக்கு பரிசாகப் பொருள் தருவதைக் காட்டிலும் அவர்கள் பெயரில் அன்னதானம், ரத்ததானம் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர் விஷால். அந்த வகையில், யோகிபாபுவின் மகள் பிறந்தநாளுக்கு குழந்தையின் பெயரில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் உணவளித்து அவர்களின் வாழ்த்து செய்தியுடன் யோகிபாபு குடும்பத்தாரை நேரில் சந்தித்து கூறினார். இந்த விஷயம்தான் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியாகப் பகிரப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in