தியேட்டர் கொடுக்காம கட்டப்பஞ்சாயத்து பண்றீங்க... முதல்வரையும் சுட்டிக்காட்டி விஷால் பரபரப்பு ஆடியோ!

நடிகர்  விஷால்
நடிகர் விஷால்

ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ படம் ஏப்ரல் 26 அன்று வெளியாகிறது. இந்தப் படத்திற்கு சரியான தியேட்டர் கொடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால்.

விஷால் வெளியிட்டுள்ள அந்த ஆடியோவில், “திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தின் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் செகரட்ரி சிதம்பரம் மற்றும் பிரசிடென்ட் மீனாட்சி அவர்களுக்கு இந்த வாய்ஸ் நோட்டை நான் பதிவு பண்றேன். ஏனென்றால், மீனாட்சி அவர்களுக்கு போன் பண்ணா, ‘நீங்க செகரட்டரிக்கு போன் பண்ணுங்க’ன்னு சொல்றாரு. இதெல்லாம் எதுக்கு நான் பதிவு பண்றேன்னா எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கடிதம் வந்திருக்கு. விஷால் பாக்கி தரணும்னு ஒரு நபர் அந்த கடிதத்துல சொல்லி இருக்காரு.

நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படம்
நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படம்

அவரு உங்க சங்கத்தோட மெம்பரும் கிடையாது. அந்த லெட்டர்ல இருக்கறபடி, நான் காசு கொடுக்கணும்ன்ற விஷயத்துக்கான எந்த முகாந்தரமும் ஆதாரமும் கிடையாது. அதுக்காக, நான் எதாவது கையெழுத்துப் போட்டு கொடுத்திருக்கிறேனா? அப்படி எதாவது இருந்தால் என்னிடம் காட்டுங்கள். உண்மையிலேயே பணம் கொடுக்க வேண்டும் என்றால் தரத் தயாராக இருக்கிறேன்.

அப்படி இருக்கும்போது, இதை வச்சுக்கிட்டு வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகற என் படத்துக்கு இப்ப வரைக்கும் தியேட்டர் கொடுக்காம இருக்காங்க. எந்த தியேட்டர் ஓனரைக் கேட்டாலும் என்னை சுத்தல்ல விடுறீங்க. இதுக்குப் பேரு கட்டப்பஞ்சாயத்து. நம்ம நாட்டுல வந்து கட்ட பஞ்சாயத்துக்கு என்ன சட்டம் அதுக்கான என்ன நடவடிக்கைன்றது உங்களுக்கும் தெரியும். இதை உங்களுக்கு மட்டும் பதிவு செய்யவில்லை.

நடிகர்  விஷால்
நடிகர் விஷால்

முதல்வர், திருச்சி கலெக்டர், திருச்சி எஸ்பி, திருச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லோரும் கட்டப்பஞ்சாயத்து செய்கிறீர்கள். என்னை மாதிரி வளர்ந்து வரும் கலைஞனுக்கு நீங்க இந்த மாதிரி செய்யறது நியாயமே இல்லை. படம் வெளியாகும் கடைசி நேரத்தில் இப்படி ஒரு கடிதம் வரும்போதே யார் குற்றவாளி என பார்ப்பவர்களுக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.

விஷால் லைகா நிறுவனத்திற்கு வைத்துள்ள கடன் பாக்கி காரணமாக ஒவ்வொரு முறையும் அவர் படம் வெளியாவதில் சிக்கல் வரும். இதுமட்டுமல்லாது, சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தொடர்புடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவதாக விஷால் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in