விஜயை பிரிந்ததால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு சங்கீதா தனியாக வந்தாரா... ரசிகர்கள் கவலை!

விஜயை பிரிந்ததால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு சங்கீதா தனியாக வந்தாரா... ரசிகர்கள் கவலை!

நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவைப் பிரிந்து விட்டார் என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் சங்கீதா- விஜய் இருவரின் தொடர் செயல்பாடுகள் அமைந்திருப்பதும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகையாக இருந்து நடிகர் விஜயின் மனைவியானவர் சங்கீதா. இருவரின் திருமண வாழ்க்கையும் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த நிலையில், ‘இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள், விவாகரத்துப் பெற போகிறார்கள்’ என்றெல்லாம் செய்திகள் வெளியானது. அதற்கேற்றார் போலவே இருவரின் செயல்பாடுகளும் இருந்தது.

விஜய், சங்கீதா
விஜய், சங்கீதா

முன்பெல்லாம் விஜயின் பட நிகழ்ச்சிகளில் சங்கீதா தவறாமல் கலந்து கொள்வார். ஆனால், இந்த விவாகரத்து செய்தி கிளம்பிய உடன் விஜய் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார் சங்கீதா. ‘லியோ’ பட இசை வெளியீட்டு விழாவிலும் அவரைப் பார்க்க முடியவில்லை. விஜயின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா மட்டுமே கலந்து கொண்டனர்.

அதேபோல, மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்திற்கும் விஜய் வாழ்த்துச் சொல்லி அறிவிப்பு ஒன்றும் வெளியிடவில்லை. விஜயை இன்னொரு நடிகையுடன் தொடர்புபடுத்தி வந்த கிசுகிசுவும் குடும்பத்தில் புகைச்சலை ஏற்படுத்தியது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதேபோல, விஜயின் அரசியல் என்ட்ரியிலும் சங்கீதா பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம்.

ஷங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா
ஷங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா

இதையெல்லாம் பொருட்படுத்தாது விஜய் இருப்பதால் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சங்கீதா இப்போது லண்டனில் பெற்றோருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் ஷங்கர் மகள் திருமணத்திற்கும் அவர் தனியாகதான் வந்திருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்தவர்கள் விஜய் படப்பிடிப்பில் இருப்பதாலேயே சங்கீதாவை அனுப்பி இருக்கிறார் என்றும் இருவரும் பிரியவில்லை என்றும் ஆறுதல் அடைந்து வருகின்றனர். இன்னும் சிலர், சங்கீதா- விஜய் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பதால்தான் இப்படி தனியாக வந்திருக்கிறார் என்றும் கவலை அடைந்திருக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in