வெற்றி துரைசாமி மரணம்... அஞ்சலி செலுத்த வந்து பாதியில் திரும்பிய நடிகர் விஜய்!

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

இயக்குநர் வெற்றி துரைசாமியின் மறைவுக்காக அஞ்சலி செலுத்த நேரில் சென்ற விஜய் பாதியிலேயே திரும்பியுள்ளார். இதற்கான காரணமும் தற்போது தெரியவந்துள்ளது.

வெற்றி துரைசாமி
வெற்றி துரைசாமி

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி சட்லஜ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சண்டிகரிலிருந்து தனி விமானம் மூலமாக இவருடைய உடல் சென்னை இன்று கொண்டு வரப்பட்டது. சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அரசியலில் பல தலைவர்களும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதேபோல துரைசாமி இதற்கு முன்பு 'என்றாவது ஒரு நாள்' என்ற ஒரு படம் இயக்கி இருப்பதால் இவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக நடிகர் அஜித்தும் வெற்றி துரைசாமியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அஜித் இன்று நேரில் வந்து அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் நடிகர் விஜயும் இவரது மறைவுக்கு நேரில் வந்துள்ளார். ஆனால், பாதியிலேயே அவர் திரும்பி உள்ள சம்பவம் நடந்துள்ளது.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சைதாப்பேட்டை வரை வந்த நடிகர் விஜய், அதிக கூட்டம் இருந்ததால் திரும்பி சென்றுள்ளார். விஜய் தரப்பில் புஸ்ஸி ஆனந்த், வெற்றி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் சைதை துரைசாமியிடம் விஜய் வந்து சென்றதை தெரியப்படுத்தியுள்ளார்.

தமிழக வெற்றி கழகம் என தனது அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் பிரபலங்களின் இறப்புக்கு நேரில் வருவது, பிறந்தநாளுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிப்பது என்று உள்ளார். அந்த வகையில் வெற்றி துரைசாமிக்கும் அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in