கையில் காயத்துடன் நடிகர் விஜய் வாக்குப்பதிவு... கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று காலை, படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஷ்யாவில் இருந்து வந்தவர், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

'GOAT' படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றிருந்த நடிகர் விஜய் வாக்களிக்க சென்னை திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஏனெனில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் விஜய். தொடர்ந்து தனது படங்களிலும் அரசியல் சார்ந்த விஷயங்களைப் பேசி வருகிறார்.

வாக்களிக்க நிச்சயம் நடிகர் விஜய் சென்னை திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போலவே இன்று காலை ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பினார் விஜய்.

நடிகர் விஜய் வருகையை எதிர்பார்த்து, இன்று காலை முதலே நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் ஊடகங்களும் ரசிகர்களும் காத்திருந்தனர்.

இணையத்திலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற டேக் டிரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில், மதியம் 12.30 மணியளவில் தனது வாக்கினை நடிகர் விஜய் பதிவு செய்தார். காரில் இருந்து இறங்கி வாக்குச்சாவடிக்குள் செல்வதற்குள் அங்கிருந்தவர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் கூட்ட நெரிசலில் திணறிப்போனார் விஜய். படப்பிடிப்பில் கையில் ஏற்பட்ட சிறுகாயத்துடன் வாக்களிக்க வந்தார்.

தமிழகத்தில் கடந்த 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்து கவனம் ஈர்த்தார் விஜய். அதுபோல, இந்த வருடம் அவரது என்ட்ரி எப்படி இருக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், எளிமையாக வெள்ளை நிற சட்டை அணிந்து, வெள்ளை நிற காரில் வந்து வாக்களித்துவிட்டு கிளம்பி சென்றார் விஜய்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in