நடிகர் சுரேஷ்கோபியின் மகள் திருமண வரவேற்பு... திரளாக கலந்து கொண்ட பிரபலங்கள்!

சுரேஷ் கோபி மகள் திருமண வரவேற்பில்...
சுரேஷ் கோபி மகள் திருமண வரவேற்பில்...

நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமண வரவேற்பில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் சுரேஷ் கோபி. இவரது மகள் பாக்யாவுக்கு ஸ்ரேயாஸ் மோகன் என்பவருடன் திருமணம் இரண்டு நாட்களுக்கு முன்பு குருவாயூரில் நடைபெற்றது. இதில் மம்முட்டி, மோகன்லால், குஷ்பு என பலத் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்வில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

அதேசமயம், திருமணத்திற்கு வந்த மம்முட்டியை தீவிரமாக சோதனை செய்தார்கள் என்றும், மோகன்லாலை சோதனை செய்யவில்லை என்றும் சர்ச்சை கிளம்பியது. மற்ற நடிகர்கள் பிரதமர் மோடிக்கு வணக்கம் வைக்க, மம்முட்டி அதைச் செய்யவில்லை என்றும் சலசலப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று மாலை சுரேஷ் கோபி மகளின் திருமண வரவேற்பு கொச்சியில் நடந்திருக்கிறது. இதில் நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், மீனா எனப் பலரும் திரையுலகைச் சேர்ந்த பலரும் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைக் கூறியுள்ளனர். திருமணம் எளிமையாக நடந்ததால், திருமண வரவேற்பைப் பெரிய அளவில் நடத்த முடிவு செய்த சுரேஷ் கோபி இதனை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in