நடிகர் சூரியை ரவுண்டு கட்டிய குழந்தைகள்... திக்குமுக்காடிப் போன ஷூட்டிங் ஸ்பாட்!

நடிகர் சூரி
நடிகர் சூரி

படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் சூரியை சூழ்ந்து கொண்டு குழந்தைகள் அன்புத் தொல்லைக் கொடுத்துள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள் ‘விடுதலை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. இது தவிர சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ’கொட்டுக்காளி’ என்கிற திரைப்படத்திலும் கதையின் நாயகனாக நடித்துள்ளார் சூரி. இதற்கு அடுத்தபடியாக அமீர் இயக்க உள்ள புதிய படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார் சூரி.

இதுதவிர துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சூரி. இதில் ரோஷினி, பிரிகிடா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி அடுத்தடுத்து பல படங்களைக் கைவசம் வைத்துள்ள நடிகர் சூரி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

படப்பிடிப்பு ஒன்றிற்காக கிராமத்திற்கு சென்ற சூரி, அங்கு தன்னுடைய கேரவனில் இருந்தபோது அவரை பார்க்க சிறுவர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அனைவரும் சூரியின் கேரவனை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டனர். இதற்கு உடனே அனைவரையும் கேரவனுக்குள் அழைத்து சுற்றிக்காட்டிய சூரி, அதனை வீடியோவாக எடுத்து ’மகிழ்வித்து மகிழ்ந்த தருணம்’ என்ற கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in