இந்த விஷயத்தை எம்.ஜி.ஆருக்கு அடுத்து செய்தது நான்தான்: நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்

எம்.ஜி.ஆருக்கு அடுத்து தமிழ் சினிமாவில் இந்த விஷயத்தை செய்தது நான்தான் என நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதற்கான விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், " 'அயலான்' படம் தீபாவளிக்கு வருவதாக சொல்லியிருந்தோம். ஆனால், சிஜி பணிகளுக்கு இன்னும் சில காலம் இருந்தால் இன்னும் சிறப்பாக புதிய விஷயங்களை சேர்க்கலாம் என சிஜி பணிகள் செய்யும் நிறுவனத்திடம் இருந்து ரெக்வஸ்ட் வந்தது. அதனால், பொங்கலுக்கு வெளியீட்டை மாற்றினோம். நீங்கள் தற்போது டீசரில் பார்க்கும் ஏலியன் வேர்ல்ட் இப்போது உருவாக்கியது.

முதல் படத்தில் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை இயக்குநர் ரவிக்குமார் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் அவருடன் இணைந்தேன். படத்தை 95 நாட்களில் எடுத்து முடித்து விட்டார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அவரும் கதைக் கேட்டு உடனே சம்மதம் சொன்னார். டீசர் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார்.

இந்தியாவில் லார்ஜ் ஃபார்மேட் கேமராவில் எடுத்த முதல் படம் 'அயலான்'தான். இதேபோன்று ஏலியன், ஸ்பேஸ் ஷிப் வைத்து இதற்கு முன்பு எம்.ஜி.ஆர். ஒரு படம் முயற்சி செய்தார். அதற்கு பிறகு நீங்கள் தான் என சொன்னார்கள்.

அயலான்
அயலான்

படத்தில் 4600 வி.எஃப்.எக்ஸ் ஷாட்ஸ் உள்ளது. இந்தப் படத்தின் மொத்த டெக்னோஷியன்ஸூம் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள். சிஜி கம்பெனி அம்பத்தூரில்தான் உள்ளது. இதற்கு வெளிநாடு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் படம் முடித்தவுடன் நானும், ரவிக்குமாரும் சேர்ந்து இன்னொரு படம் செய்கிறோம்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in