சிம்புவை வம்பிழுத்து விடிவி கணேஷை கலாய்த்த சதீஷ்!

நடிகர் சதீஷ்
நடிகர் சதீஷ்

விடிவி கணேஷின் குரலுக்கு சிம்புதான் நியாயம் சேர்ப்பார் என நடிகர் சதீஷ் கலாய்த்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முன்னணி கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வரக்கூடிய நடிகர் சதீஷ் அவ்வப்போது சர்ச்சை பேச்சுகளிலும் அடிபடுவார். இந்த நிலையில், அவர் ‘நாய் சேகர்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

தற்போது, செல்வின் ராஜ் இயக்கத்தில் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இதில் டப்பிங் பணியின் போது சதீஷ் விடிவி கணேஷ் போல இமிடேட் செய்துள்ள வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

படத்தில் விடிவி கணேஷ் பேச வேண்டிய வசனத்தை அவர் இல்லாததால் சதீஷையே மிமிக்ரி செய்து பேச சொல்கிறார் இயக்குநர். சதீஷூம் முயற்சி செய்ய அது சரியாக வரவில்லை. அதற்குள் விடிவி கணேஷே வந்துவிட அந்த இடமே ரகளை ஆகிறது. இந்த வீடியோவை சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ‘சிம்பு சார் மட்டும்தான் அவர் குரலை சரியாக பேச முடியும்’ எனக் கூறி, இதன் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்பதையும் சொல்லி இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in