'வணங்கான்' படத்தில் நடிக்கும் சரத்குமாரின் முதல் மனைவி!

சரத்குமார், வரலட்சுமி, சாயா தேவி
சரத்குமார், வரலட்சுமி, சாயா தேவி

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவி இயக்குநர் பாலாவின் 'வணங்கான்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

வரலட்சுமி, சாயா தேவி
வரலட்சுமி, சாயா தேவி

இயக்குநர் பாலா நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘வணங்கான்’ படம் மூலம் இயக்கத்திற்கு திரும்பி இருக்கிறார். இந்தப் படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்து பின்பு அந்த வாய்ப்பு அருண் விஜய்க்குப் போனது. பாலா- சூர்யா இடையே ஏற்பட்ட பிரச்சினையே சூர்யா படத்தில் இருந்து விலக முக்கியக் காரணம் என சொல்லப்பட்டது. அதேபோல, சூர்யா ஒப்பந்தமாகியிருந்த சமயத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருந்தார். அவரும் தேதி பிரச்சினைகளால் ஒதுங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தில் நடித்த மமிதா மூன்று டேக் வாங்கியதால் பாலா தன்னை அடித்ததாகச் சொன்ன வீடியோவும் வைரலானது.

வரலட்சுமி, சாயா தேவி
வரலட்சுமி, சாயா தேவி

இந்த நிலையில்தான் நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவி பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நடித்திக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு மிஸ் பெங்களூரு பட்டம் வென்ற சாயா தேவியை சரத்குமார் செய்து கொண்டார். இதன்பின் கடந்த 2000-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

பாலாவின் படத்தில், கதையில் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் சாயாதேவி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் சாயாதேவியின் மகளான நடிகை வரலட்சுமி நடித்திருந்தார்.

சேவ் சக்தி அறக்கட்டளையை சாயாதேவி நிர்வகித்து வருகிறார். மேலும், தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், விவாகரத்துக்குப் பின்பு பல பிரச்சினைகளை தான் சந்தித்ததாகவும் திருமணம் என்பது ஒருநாள் கூத்து கிடையாது என்றும் அவர் கூறியிருந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் தமிழகத்தில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

திமுக - மநீம தொகுதி உடன்பாடு இன்று கையெழுத்தாக வாய்ப்பு!

குட்நியூஸ்... தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: நாளை தொடங்குகிறது!

அதிமுக முன்னாள் பெண் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு...16 கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!

கூச்சமே இல்லாமல் எப்படி வருகிறீர்கள்?: பிரதமர் மோடி மீது சாட்டை சொடுக்கிய திமுக!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in