'சூர்யவம்சம் 2’ திரைப்படத்தில் 150 வயசானலும் நடிப்பேன்... நடிகர் சரத்குமார்!

'சூர்யவம்சம்’
'சூர்யவம்சம்’

”'சூர்யவம்சம் 2’ படத்தில் 150 வயதானாலும் நடிப்பேன்” என்று நடிகர் சரத்குமார் ’ஹிட் லிஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலகலப்பாகப் பேசியிருக்கிறார்.

’சூர்யவம்சம்’, ‘வானத்தைப் போல’ எனப் பல ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் விக்ரமன். இவரது மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஹிட் லிஸ்ட்’. இதனை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், "இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் விக்ரமன் இருவரும் என் வாழ்வில் முக்கியமான நபர்கள். அவர்கள் எனக்கு மறக்க முடியாத தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.

’சூர்யவம்சம்’
’சூர்யவம்சம்’

எவ்வளவோ பிரச்சினைகள் எனக்கும் ரவிக்குமாருக்கு வந்தாலும் அவர் ஒரு தங்கமான மனிதர். இது ஒரு குடும்ப விழா. விஜய் கனிஷ்கா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். ‘சூர்யவம்சம் 2’ எடுக்கலாம் என்று நானும் விக்ரமன் சாரும் சேர்ந்து நிறைய பேசினோம். ஆனால், அது சரியாக அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

சீக்கிரம் அது நடக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். ’சூர்யவம்சம் 2’ அல்ல 3... 4... 5... என எத்தனை பார்ட் வேண்டுமானாலும் எடுக்கட்டும். எனக்கு 150 வயதானாலும் அந்தப் படத்தில் நான் நடிப்பேன். உடனே, ’150 வயது வரை வாழ்வேனா?’ என்று கேட்காதீர்கள்.

’ஹிட் லிஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்...
’ஹிட் லிஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வணங்கும் பாபாவே நான்காயிரம் ஆண்டு வாழ்ந்து இருக்கிறார். புரட்சித் தலைவர், மக்கள் தலைவி இல்லை என்றாலும், இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அதுதான் நம் வாழ்க்கை” என்றும் பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in