'தென் மாவட்டம்' பட சர்ச்சை: ஆர்.கே. சுரேஷ் பதிலடியால் அமைதியான யுவன்!

ஆர்.கே. சுரேஷ்
ஆர்.கே. சுரேஷ்
Updated on
2 min read

'தென் மாவட்டம்’ என்றப் படத்தைத் தான் இயக்கி, நடிக்க இருப்பதாகச் சொல்லி அதன் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ். அதில் இசை யுவன் ஷங்கர் ராஜா எனப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் படத்திற்குத் தான் இசையமைக்கவில்லை என்று யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.

ஆர்.கே. சுரேஷ்
ஆர்.கே. சுரேஷ்

ஆருத்ரா மோசடி வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு பரபரப்பாகத் தேடப்பட்டவர் நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ். இவர் இந்தப் பிரச்சினைக்குப் பிறகு ‘காடுவெட்டி’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக வந்திருந்தார். இதில் பேசியவர், ‘என்னைத் தொடர்புபடுத்தி நிறைய கட்டுக்கதைகள் வருகிறது. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு. அப்படியான சூழலில் என்னைப்பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு’ என்றார்.

இந்த விழா முடிவடைந்த பிறகு தனது எக்ஸ் பக்கத்தில், ‘தென் மாவட்டம்’ என அடுத்து ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருப்பதாகச் சொல்லி அதன் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த யுவன், இந்தப் படத்திற்குத் தான் இசையமைக்கவில்லை எனவும் அதற்காக யாரும் தன்னிடம் பேசவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இது இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், உடனே இதற்கு ஆர்.கே. சுரேஷ் பதிலளித்தார். அதாவது, ‘இசை நிகழ்ச்சி ஒன்றிற்காகவும், ஒரு படத்திற்காகவும் யுவன் சார் எங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். அதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள் யுவன்’ என அந்த ட்விட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து யுவன் ஷங்கர் ராஜா அமைதியாகிவிட்டார். ஆர்.கே. சுரேஷின் இந்த ட்விட்டிற்கு அவர் திரும்ப பதிலளிக்கவும் இல்லை, தான் போட்ட அந்த ட்விட்டைடையும் நீக்கவும் இல்லை. இதனால் யார் சொல்வது உண்மை என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி... 7 மாநிலங்களில் NIA தீவிர சோதனை!

எம்ஜிஆர் பிரச்சாரத்தையும் மீறி அதிமுக வேட்பாளரை தோற்கடித்த இரட்டை இலை... 1977 தேர்தல் சுவாரஸ்யம்!

அதிரடி... ஸ்பாட்டிஃபை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ16,500 கோடி அபராதம்!

காதல் மனைவி தற்கொலை... வேதனையில் ஆசிட் குடித்து கணவர் உயிரை விட்ட பரிதாபம்!

அதிர வைத்த 'ஆபரேஷன் லோட்டஸ்'... காங்கிரஸ் கூண்டோடு காலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in