ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

ரூ. 2 கோடி வைர நெக்லஸ்; ஹை ஹீல்ஸ்... நடிகைகளுக்கே டஃப் கொடுத்த ரன்வீர் சிங்!

இரண்டு கோடி ரூபாய்க்கு வைர நெக்லஸ், ஹை ஹீல்ஸ் என தனது ஃபேஷன் ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ‘ஹீரோயின்ஸ்கே டஃப் கொடுக்கிறாரே!’ என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் கவனம் ஈர்ப்பிற்காக செய்யும் பல விஷயங்கள் பேசுபொருளாகும். திடீரென அரை நிர்வாணத்தில் புகைப்படங்கள் பகிர்வது, பாலியல் தொடர்பான விளம்பரங்களில் நடிப்பது என இவரைப் பற்றி பல விஷயங்கள் அடிக்கடி பேசுபொருளாகும்.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

உடைகளில் புது ஃபேஷனை முயற்சித்து பார்ப்பதில் ஆர்வம் கொண்டவரான ரன்வீர், சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் அவர் அணிந்திருந்த நகையும் ஹைஹீல்ஸ் காலணியும் தான் இப்போது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வெள்ளை நிற ஜிகுஜிகு உடையில் வந்திருந்த ரன்வீர் சிங் கழுத்தில் முறுக்கு சங்கிலி போல அணிந்திருந்த நகை ரூ. 2 கோடி மதிப்பிலான வைர நெக்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாது, அந்த வெள்ளை நிற உடைக்கு மேட்சிங்காக ஷூ அணியாமல், ஹைஹீல்ஸ் வெள்ளை நிற காலணி அணிந்து வந்து அசத்தியிருந்தார் ரன்வீர். ஹீரோயின்களைப் போலவே, ஹீல்ஸை தூக்கி போஸ் கொடுத்தும் ரகளை செய்திருக்கிறார்.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

இவரது உடை ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்து பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும் இன்னொரு பக்கம் நெட்டிசன்கள் கேலியும் செய்து வருகின்றனர். ‘இதென்ன, இவர் ஹீரோயின்ஸ்கே டஃப் கொடுப்பார் போலயே! தூக்கக் கலக்கத்தில் தீபிகாவின் நகையையும், காலணியையும் மாட்டிக்கொண்டு வந்துவிட்டாரா?’ என்றெல்லாம் கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in