போட்டோ கேட்ட ரசிகர்... ‘விக்’கை கழற்றிய ரஜினி... தலைதெறிக்க ஓடிய சம்பவம்!

போட்டோ கேட்ட ரசிகர்... ‘விக்’கை கழற்றிய ரஜினி... தலைதெறிக்க ஓடிய சம்பவம்!

ரசிகர் ஒருவர் தன்னிடம் புகைப்படம் எடுக்க விரும்பியபோது நடிகர் ரஜினிகாந்த் தலையில் இருந்த ‘விக்’கை கழற்றி இருக்கிறார். இதைப் பார்த்த அந்த ரசிகர் தலைதெறிக்க ஓடியிருக்கிறார். பிறகு என்ன நடந்தது என்ற சுவாரஸ்ய சம்பவத்தை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேட்டி ஒன்றில் பகிந்துள்ளார்.

ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் சில்வா. 'மங்காத்தா’, ‘மாஸ்டர்’ உள்ளிட்டப் பல தமிழ் திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றினார். இதுமட்டுமல்லாது, ‘சித்திரை செவ்வானம்’ என்ற படத்தையும் அவர் இயக்கியுள்ளார்.

இவர் யூடியூப் தளம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், நடிகர் ரஜினிகாந்தின் நகைச்சுவையுணர்வு பற்றியும் அங்கு அவர் எல்லோரையும் குறும்புத்தனமாக வம்பிழுத்தது பற்றியும் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.

’சிவாஜி’ படப்பிடிப்பு சமயம் அது. அங்கிருந்த வட இந்திய பையன் ஒருவனை ரஜினிகாந்த் எப்போதும் வம்பிழுத்துக் கொண்டே இருப்பாராம். ஒருமுறை அந்த பையன் ரஜினியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கேட்டிருக்கிறான்.

ரஜினியும் அதற்கு உடனே சம்மதம் தெரிவித்து இருக்கிறார். புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக ’கொஞ்சம் வெயிட் பண்ணு, நான் விக்கை ரூம்ல வச்சுட்டு வரேன்’ என தலையில் இருந்த விக்கை அவர் கழற்ற சென்றிருக்கிறார். இதைக்கேடு அப்செட்டான அந்தப் பையன் ‘எனக்கு ஃபோட்டோ வேண்டாம்’ எனச் சொல்லி தலைதெறிக்க ஓடிவிட்டானாம்.

அவனை அழைத்து வரச்சொன்ன ரஜினி அவனிடம் காரணம் கேட்டிருக்கிறார். ‘நீங்கள் விக்கோடு இருந்தால்தான் எங்கள் ஊரில் ரசிப்பார்கள். விக்கை நீங்க கழட்டுவதாக இருந்தால் எனக்கு ஃபோட்டோ வேண்டாம்’ எனச் சொல்லி இருக்கிறான். இதைக் கேட்டு சிரித்த ரஜினி, அவனை சமாதானப் படுத்தி அவனுடன் விக்கோடு ஃபோட்டோ எடுத்திருக்கிறார். சில்வா மாஸ்டர் சொன்ன இந்த விஷயத்தை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in