25 Years of Padaiyappa: ஜெயலலிதாவை மனதில் வைத்து ரஜினிக்கு கே.எஸ்.ரவிக்குமார் எழுதிய வசனங்கள்... சில சுவாரஸ்ய தகவல்கள்!

25 Years of Padaiyappa: ஜெயலலிதாவை மனதில் வைத்து ரஜினிக்கு கே.எஸ்.ரவிக்குமார் எழுதிய வசனங்கள்... சில சுவாரஸ்ய தகவல்கள்!

வெள்ளி விழா கண்டிருக்கிறது நடிகர் ரஜினிகாந்தின் ‘படையப்பா’. கே.எஸ். ரவிக்குமார்- ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான இந்தப் படத்தை காட்சிக்கு காட்சி விவரித்துச் சொல்லும் வெறித்தனமான ரசிகர்கள் இப்போதும் உண்டு. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்ற ஜாம்பவான்கள் படத்தில் இருந்தாலும் இவர்களை எல்லாம் தாண்டி இந்தப் படத்தின் பெயரைச் சொன்னதும் முதலில் நினைவுக்கு வருவது ‘நீலாம்பரி’தான்.

இந்தக் கேரக்டருக்கு பின் தன் கரியரே காலி என்று பயந்து கொண்டே நடித்தாராம் ரம்யா கிருஷ்ணன். ஆனால், அவர் நினைத்ததற்கு நேரெதிராக அமைந்ததுதான் சுவாரஸ்யம். ‘படையப்பா’ படத்தின் வெள்ளி விழா ஆண்டில் படம் குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம்.

கமர்ஷியல் படங்களுக்குப் பெயர் போன இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ‘படையப்பா’ படத்திற்கு முன்பே ரஜினியுடன் ‘முத்து’ படத்தில் பணியாற்றினார். அந்தப் படம் கொடுத்த அதிரி புதிரி ஹிட்டால் ‘படையப்பா’ படம் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தது. குறிப்பாக, தனது வழக்கமான ஹீரோ- வில்லன் என்ற டிராக்கில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் ’ஆன்டி- ஹீரோயின்’ என்ற லைனை தேர்ந்தெடுத்திருந்தார். ’படையப்பா’ என்றதும் பலருக்கும் நீலாம்பரி கதாபாத்திரம் தான் முதலில் நினைவுக்கு வரும்.

மாஸ் ஹீரோவை எதிர்க்கும் துணிச்சல், திமிரு, ஆசைப்பட்டதை அடைந்தே தீர வேண்டும் என்ற பிடிவாதம் என காட்சிக்கு காட்சி நீலாம்பரியாக மிரட்டி இருப்பார் ரம்யா கிருஷ்ணன். இவரது கதாபாத்திரத்தில் முதலில் மீனா, நக்மா போன்ற நடிகைகளை நடிக்க வைக்க பரிசீலனையில் இருந்தார்கள். ஆனால், அது செட்டாகாமல் போக, ரம்யா கிருஷ்ணன் தேர்வானார்.

என்னதான் நடிப்புக்கு சவால் விடும் கதாபாத்திரமாக நீலாம்பரி இருந்திருந்தாலும் கரியரே காலியாகி விடுமோ என முதலில் இந்தப் படத்தில் நடிக்க பயந்தார் ரம்யா. ஏனெனில், ரஜினிக்கு வில்லி என்ற விஷயம் ஒன்று. இப்படி முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடித்ததில்லை என்பதால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற அச்சம் இன்னொரு பக்கம். ஆனால், இப்படி நீலாம்பரியை இத்தனை வருடங்கள் கழித்தும் கொண்டாடு வார்கள் என தான் நினைக்கவில்லை என பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

இறக்கை விரித்தது போல படத்தில் வரும் நீலாம்பரியின் டொயோட்டா செரா ஹேட்ச்பேக் கார் இயக்குநர் ரவிக்குமாருடையது. ரஜினி கொடுத்த ஐடியாவால் அது நீலாம்பரிக்கு பயன்படுத்தப்பட்டது.

தொண்ணூறுகளின் பிற்பாதியில் ரஜினி- ஜெயலலிதா இடையே இருந்த அரசியல் அதிருப்தி எல்லோருக்கும் தெரிந்ததே! நீலாம்பரி கதாபாத்திரம் அவரை மனதில் வைத்துத்தான் எழுதியது என இயக்குநர் ரவிக்குமார் வெளிப்படையாகவே சொன்னார். ஆனால், அதற்கு முன்பு ‘பொன்னியின் செல்வன்’ கதையில் வரும் நந்தினி கதாபாத்திரத்தின் தாக்கத்தில் உருவானது எனவும் கூறினார்.

நடிகர் சிவாஜி கணேசன் ரஜினியின் அப்பாவாக நடித்திருப்பார். சினிமா வாழ்வில் இது அவருக்கு இறுதிப் படமாக அமைந்தது. முதல் பாதியில் கதைப்படி சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பின்பு கலகலப்பாக இருந்த ரஜினி, இரண்டாம் பாதியில் சிவாஜி கதாபாத்திரத்தின் நடை, உடை என மாறியிருப்பார். அதேபோல, ரஜினிக்கு ஜோடியாக முதலில் சிம்ரனையும் தங்கை கதாபாத்திரத்தில் ஷாலினியையும் நடிக்க வைக்க பேசப்பட்டது.

’என் வழி தனி வழி’, ‘ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்’ என பன்ச் வசனங்களில் பட்டையைக் கிளப்பியது படையப்பா. இயக்குநர் ரவிக்குமார், ரமேஷ் கண்ணாவுடன் சேர்ந்து ரஜினியும் இதில் பங்கெடுத்து இருக்கிறார். அதேபோல, படம் வெளியாவதற்கு முன்பு பன்ச் வசனங்கள் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பின் போது வசனங்கள் பேசாமல் லிப் சிங்க் மட்டும் செய்து டப்பிங்கில் பேசி இருக்கிறார்கள்.

பட ரிலீஸூக்கு முன்பே ரூ. 3 கோடி வியாபாரம் செய்து மாஸ் காட்டிய ‘படையப்பா’ வின் உண்மையான ரன்னிங் டைம் 5 மணி நேரமாம். இரண்டு இடைவேளை விடலாமா என கமலிடம் ரஜினி ஐடியா கேட்க, அது செட்டாகாது என நீளத்தைக் குறைக்க சொல்லி கருத்துச் சொன்னாராம் கமல். அதன் பிறகே ஒரு இடைவேளையுடன் படம் வெளியானது.

இதையும் வாசிக்கலாமே...   


லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!

சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!

திருமாவளவன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் திடீர் சோதனை...சிதம்பரத்தில் சிறுத்தைகள் குவிந்ததால் பரபரப்பு!

நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in