3 லட்சம் செலவில் லால் சலாம் கட்டவுட்... மாஸ் காட்டிய ரஜினி ரசிகர்கள்!

மலர் கட் அவுட்
மலர் கட் அவுட்
Updated on
1 min read

ரஜினி நடித்த லால் சலாம் படம் இன்று வெளியானதை அடுத்து, ரஜினிக்கு பிரம்மாண்டமான கட் அவுட் வைத்து மூன்று லட்சம் செலவில் மலர் அலங்காரம் செய்துள்ளனர் அவரது ரசிகர்கள். இந்த போட்டோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'லால் சலாம்' படத்தில்  டிகர்  ரஜினிகாந்த்
'லால் சலாம்' படத்தில் டிகர் ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ படம் இன்று வெளியாகி இருக்கிறது. ரஜினி படம் வெளியாகிறது என்றாலே அவரது ரசிகர்களுக்கு திருவிழா தான். பட்டாசு வெடித்தும், கட் அவுட் வைத்தும் ரசிகர்கள் தியேட்டர்களை அமர்க்களப்படுத்துவார்கள். அப்படித்தான் இன்று சென்னை ரோகிணி திரையரங்கில் ரஜினிக்கு பிரம்மாண்டமான கட் அவுட் வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

மலர் கட் அவுட்
மலர் கட் அவுட்

இந்த கட்டவுட்டுக்காக மட்டும் மூன்று லட்சம் செலவு செய்திருக்கிறார்கள். லட்சங்களைக் கொட்டி மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை ரஜினிகாந்த் கட்டவுட்டிற்கு அணிவித்து மாஸ் காட்டி இருக்கிறார்கள் ரசிகர்கள். இது தொடர்பான போட்டோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in